தாயின் மணிக்கொடி – சிறுகதை

தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.

பரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு. Continue reading “தாயின் மணிக்கொடி – சிறுகதை”

மாற்றம் வளர்ச்சிக்கு துணை

மாற்றம்

மாற்றம் வளர்ச்சிக்கு துணை என்ற இக்கட்டுரை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய, எங்கே போகிறோம் என்னும் நூலில்,  வளர்ச்சி மாற்றம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

மனிதகுலத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்குரியது. மாற்றத்திற்குக் காரணம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு உந்துசக்தி – ஒன்று, காலத்தின் பரிணாம வளர்ச்சி, பிறிதொன்று மாற்றம்.

மாற்றங்கள் வளர்ச்சிக்கு துணை, அரண்.

எந்த ஒன்றும் தேங்கிவிட்டால் அழிந்து விடும்; பயனற்றுப் போகும்.  நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது.

Continue reading “மாற்றம் வளர்ச்சிக்கு துணை”