காத்திருக்கும் நான்

வாய்ப்புக்கள் என்னும் வரம்

தனிமைதான் எனக்கு நிரந்தரம் என்று ஆனது

யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை

நலம் கேட்போரின் வார்த்தையில் உயிரோட்டம் இல்லை

சின்ன சின்ன சந்தோச‌ங்களுக்கு மனம் ஆசைப்படுகிறது

ஐந்து வருடம் காப்பாற்றிய கவுரவம் காற்றில் போனது

 

மௌனத்தை என் மீது திணித்தது வாழ்க்கை

இங்கு எது பேசுவதற்கும் யோசனையாக இருக்கிறது

என் பொறுப்புகளை கையாள வழி தேடுகிறது மனசு

நம்பிக்கை கொண்ட மனத்திற்கு பாதை எங்கும் வழிகள்

என்ற கூற்று என் முன்னே பொய்த்து போனதோ?

 

கணவனாக, தந்தையாக, மகனாக, நல்ல உறவாக

என் பொறுப்புகள் செய்யப்படாமல் கிடக்கின்றன‌

சார்ந்து இருந்து பழக்கப்படாத மனது

உறவுகள் செய்யும் உதவியில் தொய்மை அடைகிறது

சோதனைகளை சாதனைகளாக்கும் என் மனதிற்கு

இப்பொழுது ஒய்வு காலமாக இருக்கிறது

 

மறுபடியும் வாய்ப்பிற்கு காத்திருக்கிறேன் நான்

என் உறவுகளுக்கு என்ன நலமானது பண்ண முடியுமோ

அதனை முடிக்க தருணம் வரும் வரை காத்திருக்கிறேன்

 

வாழ்க்கை என்னை மறுபடியும் புடம் போடுகிறது

எங்கு வீழ்த்தப்பட்டேனோ அங்கேயே மீண்டும் எழுவேன்

நான் பக்குவப்பட‌ இயற்கை தடைகளைக் கொடுக்கிறது

நான் பக்குவப்பட‌ இயற்கை தனிமையைக் கொடுக்கிறது

இதனை சாபமாகக் கருதாமல் வரமாகக் கொள்வேன்

 

வெற்றி தோல்வி காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை

என்ற நியதி உணர இயற்கை தனிமை தருகிறது

என்னை சுற்றி எது நடந்தாலும் நடக்கட்டும்

சூழ்நிலையால் பாதிக்கப்படும் கைதியல்ல நான்

வாய்ப்புகளை வரமாக மாற்ற இன்னும்

இனிய பக்குவத்திற்கு காத்திருக்கும் நான்

 சிறுமலை பார்த்திபன்

 

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.

1. தட்டி வையுங்கள்

2. தட்டிக் கொடுங்கள்

இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான‌ நடைமுறை என்பது என் எண்ணம். Continue reading “அன்பான பெற்றோர்களுக்கு”

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்

Sucess

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர் என்பது புதுமொழி. (பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி).

அதாவது வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இன்றைய சூழ்நிலையில் ஏற்படும் பதற்றம் அதனால் உண்டாகும் பயத்தை விட்டு வெளியே வர வேண்டும். Continue reading “பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்”

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?

நண்பர்கள்

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது.

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த நபரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. Continue reading “உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?”

யார் நாத்திகன்?

விவேகானந்தர்

யார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்!

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

மனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள். Continue reading “யார் நாத்திகன்?”