போராட்டம் போதும்

போராட்டம் போதும்

போராட்டம் போதும்; வாழ்க்கையை எவ்வாறு போராட்டமின்றி வாழலாம் என்பதை சொல்லிக் கொடுக்கின்றார் பேராசிரியர் நவராஜ் செல்லையா அவர்கள்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறையுள் இந்த மூன்றும்தான், ஒவ்வொரு மனிதருக்கும் எதிரே நின்று, புதிர் கிளப்பியும் சதிராடியும் பிரச்சினைகளை விளைவித்துப் போராடச் செய்வனவாகும். Continue reading “போராட்டம் போதும்”

நம்பிக்கை நட்சத்திரம் – விளையாட்டுக்கள்

நம்பிக்கை நட்சத்திரம்

விளையாட்டுக்கள் மனித வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார் பேராசிரியர் நவராஜ் செல்லையா அவர்கள். ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இயக்கம் என்பது மனித உடலில் இயற்கையாக நடப்பது. அவரவர் தங்களை அறியாமலேயே அந்த இயக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

எதையும் எதிர்ப்பார்க்காமல் இயங்கும் உறுப்புக்களை தவிர்க்க முடியாது. அவை தன்னிச்சையானவை.

செயல் என்பது நினைத்து, திட்டமிட்டுத் தொடர்கின்ற இயக்கமாகும். அதுவும் பயன் கருதிச் செய்வனவாகும்.

செயல் என்றவுடன் கைதான் நமக்கு நினைவுக்கு வரும். அதனால்தான் உதவியிழந்த நிலைக்கு உதாரணம் கூறுகின்ற பொழுது “கையிழந்தது போல் இருந்தது” என்று கூறுவார்கள்.

உடுப்புக்கு ‘உடுக்கை’ என்பது ஒரு பெயர். உடுத்துதலுக்கு கை மிகவும் பயன்படுவதால் தான் உடு+கை என்றும் வந்திருக்கலாம்.
இதை வைத்துத்தான் ‘உடுக்கை இழந்தவன் கை போல’ என்று வள்ளுவரும் வலியுறுத்திப் பாடிச்சென்றிருக்கிறார் போலும். Continue reading “நம்பிக்கை நட்சத்திரம் – விளையாட்டுக்கள்”

விளையாட்டுக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு

பனி வளைகோல் பந்தாட்டம்

விளையாட்டுக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு ஆகும்; மனிதர்களின் உடன்பிறப்பாகும் என்கிறார் பேராசிரியர் நவராஜ் செல்லையா அவர்கள்.

வாய்ப்புகளுக்கு மற்றொரு பெயர் தான் வாழ்க்கை. இதைத் தான் ஆங்கிலத்தில் Life  என்கிறார்கள்.

முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் கட்டாயம் இருந்தாக வேண்டும். வாய்ப்புகள்தான் மனிதர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்துவனவாக அமைந்து விளங்குகின்றன.

வருகின்ற வாய்ப்பினை ஒருவன் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதை வைத்துக் கொண்டே, நாம் அவனைப் பற்றி சரியாகக் கணித்து விடலாம்.

வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவன் வடிகட்டிய முட்டாள். தீக்குள் கையை வைத்த பிறகு சுடுகிறது என்று உளறி, உணருகின்ற ‘புத்திசாலி’ வர்க்கத்தைச் சேர்ந்தவன். Continue reading “விளையாட்டுக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு”

விரைக, உயர்க, வலிமை பெறுக

விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

விரைக, உயர்க, வலிமை பெறுக என்று விளையாட்டுகள் நமக்கு வாழ்க்கைப் பண்பினைச் சொல்லிக் கொடுக்கின்றன‌ என்கிறார் பேராசிரியர் நவராஜ் செல்லையா அவர்கள்.

மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிரலாபித்துக் கொண்டே வாழ்கின்றார்கள். வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகின்றார்கள். இதுதான் மனித வரலாறு தருகின்ற வருத்தமான காட்சி.

கோடி கோடியாக மனிதர்கள் பிறக்கின்றார்கள், கூடிகூடி வாழ்ந்தவாறு, கோடியிலே கிடந்து, வாடி வதங்கி, அழுது புலம்பி, இளைத்துக் களைத்து, இறந்து போய் இருந்த இடத்தைக் காலி செய்து விடுகின்றார்கள்.

பூத உடல் போனாலும் புகழுடல் இந்தப் பூதலத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள்தான் புத்திசாலிகள்.

வரம் பெற்று வாங்கி வந்த இந்த மனித உடலை, புனித உடலாக மாற்றிப் புகழ் பெற்று இறப்பவர்கள்தான் பெருமை பெற்றவர்கள் ஆவார்கள்.

அப்படி நினைக்காதவர்கள் நிலை, மண்ணுக்கும் அதில் கிளம்பி மறையும் புழுதிக்கும் கீழ்தான், பாழ்தான்.

‘தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்று வள்ளுவர் பாடிச் சென்றார்.

 

‘தோன்றிற் பொருளோடு தோன்றுக – அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’

என்று சமுதாய தர்மமாக பாட வேண்டிய நிலைமை இன்று நம்மிடையே நிறைந்து கிடக்கிறது.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று பாடியது உண்மைதான்.

பணம் இல்லாதவன் பிணம் என்ற பழமொழி நூற்றுக்கு நூறு இன்று பொருந்துகிறது. காரணம் – நமது சமுதாய அமைப்பு அப்படி மாறிப்போய் கிடக்கிறது. Continue reading “விரைக, உயர்க, வலிமை பெறுக”

ஆயத்தம் அவசியம்

ஆயத்தம் அவசியம்

ஆயத்தம் அவசியம் என்ற கட்டுரை, விளையாட்டு எப்படி நமக்கு வாழ்க்கைக்கான ஆயத்தத்தைச் சொல்லிக் கொடுக்கின்றது எனக் காட்டுகின்றது.

மனிதப் புதிர்

எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் ஒருநாள் என் நண்பர் ஒருவரை வழி அனுப்பி வைப்பதற்காகச் சென்றிருந்தேன்.

இரவு மணி 9 இருக்கும். வண்டி புறப்படுவதற்குக் கடைசி மணி அடித்தாகி விட்டது. ஒரு குடும்பம் அவசரம் அவசரமாக ஸ்டேஷன் உள்ளே நுழைந்தது. Continue reading “ஆயத்தம் அவசியம்”