கிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன?

கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன?

கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன? என்பது பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.

 

1.ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) பந்தை உயரமாக அடித்துவிட்டு எதிர் விக்கெட்டை அடைந்துவிடுகிறார். ஆனால் அந்தப் பந்தை எதிர்க் குழுவினர் பிடித்துவிடுகிறார் (Catch). அப்படியானால் என்ன முடிவு எடுக்கலாம்?.

அவர் ஆட்டமிழக்கிறார் (Out). அவர் எடுத்த ஓட்டம் கணக்கில் சேராது. ஏனெனில், அவரே ஆட்டத்தை இழந்துவிட்டிருக்கிற பொழுது, அவர் எடுத்த ஓட்டம் எப்படி கணக்கில் சேரும்? Continue reading “கிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன?”

கிரிக்கெட் ஆட்ட நேரம் பற்றி அறியுங்கள்

கிரிக்கெட் ஆட்ட நேரம்

கிரிக்கெட் ஆட்ட நேரம் பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.

 

  1. ஆடுதற்குரிய ஆட்ட நேரம் முடிந்து விட்டது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்றவுடன் ‘நேரம் முடிந்து விட்டது’ (Time) என்று நடுவர் கூறிக்கொண்டே, இரண்டு விக்கெட்டுகளிலும் உள்ள ‘இணைப்பான்களை’ எடுத்துவிடுவார். அப்பொழுது, ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்று அறிந்துகொள்ளலாம். Continue reading “கிரிக்கெட் ஆட்ட நேரம் பற்றி அறியுங்கள்”

கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி பற்றி அறிவோம்

கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி

1. வெற்றி தோல்வியை நடுவர்கள் நிர்ணயிக்க விதிமுறைகள் எவ்வாறு உதவுகின்றன?

ஒரு போட்டி ஆட்டம், ‘முறை ஆட்டங்கள்’ (Innings) அல்லது நாள் கணக்கு அல்லது பந்தெறித் தவணைக் கணக்கு என்றவாறு                முன்கூட்டியே முடிவு செய்வதற்கேற்றவாறு, ஆடி முடிக்கப்பெறும். Continue reading “கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி பற்றி அறிவோம்”

கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) பற்றி அறிவோம்

ரன் எடுக்கும் போது

கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.

 

1. ஓட்டங்கள் (Run) எவ்வாறு எடுக்கவேண்டும்?

ஒரு குழு வெற்றி பெறுவதற்கு, இன்னொரு குழுவைவிட அதிகமான ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆட்டத்தின் நோக்கமாகும்.

ஆக, கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) எவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.

Continue reading “கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) பற்றி அறிவோம்”

ஆட்டம் இழப்பு வகைகள் – கிரிக்கெட் கேள்வி பதில்

ஆட்டம் இழப்பு

ஆட்டம் இழப்பு (அவுட் ) என்பது கிரிக்கெட்டில் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

ஆட்டம் இழப்பு வகைகள்

1. ஒரு பந்தடி ஆட்டக்காரர் எந்தெந்த வழிகளில் ஆட்டமிழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன?

1. பந்தெறியால் விக்கெட் விழுதல் (Bowled).

2. பந்தை அடித்துப் ‘பிடி கொடுத்தல்’ (Caught).

3. பந்தைக் கையால் தொட்டாடுதல் (Handled the Ball).

4. பந்தை இருமுறை அடித்தாடுதல் (Hit the ball Twice).

5. தானே விக்கெட்டை வீழ்த்திக்கொள்ளுதல் (Hit Wicket).

6. விக்கெட்டின் முன்னே கால் வைத்திருத்தல் (LBW).

7. தடுத்தாடுவோரைத் தடை செய்தல் (Obstructing the field).

8. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run Out).

9. விக்கெட் வீழ்த்தப்படுதல் (Stumped).

மேலே கூறப்பட்டிருக்கும் ஒன்பது காரணங்களால் ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டத்திலிருந்து ஆட்டமிழந்து வெளியேறுகின்ற வாய்ப்பு இருக்கின்றது. Continue reading “ஆட்டம் இழப்பு வகைகள் – கிரிக்கெட் கேள்வி பதில்”