விளையாட்டுகள் தோன்றிய வரலாறு

விளையாட்டுக்கள் தோன்றிய வரலாறு

விளையாட்டுகள் தோன்றிய வரலாறு என்ற இந்த கட்டுரை, எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

விளையாட்டின் இயல்புகள்

விளையாட்டுகள் என்பன, மனிதர்களுக்குள்ளே இயற்கையாக அரும்பி மலர்ந்துவரும் அருமை நிறைந்ததாகும்.

விளையாட்டுகள் எப்பொழுதும் எல்லோராலும் விரும்பப்படும் இனிமை நிறைந்ததாகும்.

எந்த வயதினரும் எந்தப் பிரிவினரும், சாதிமத பேதமின்றி, ஆண்பெண் வேறுபாடின்றி, ஏழை செல்வர் என்ற ஏற்றத்தாழ்வின்றி, சமமாகப் பங்கு பெறுகின்ற அளவுக்கு எளிமை நிறைந்ததாகும்.

இத்துடன், பங்கு பெறுகின்ற எல்லோருமே கூடுதல் குறைச்சலின்றி இன்பம் கொடுக்கும் பெருமை நிறைந்ததாகும். Continue reading “விளையாட்டுகள் தோன்றிய வரலாறு”

வாழ்க்கையும் விளையாட்டும்

வாழ்க்கையும் விளையாட்டும்

வாழ்க்கையும் விளையாட்டும் என்ற இந்த கட்டுரை, எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

ஆனந்த ரகசியம்

எங்கே கிடைக்கும் இன்பம்? எனக்குக் கிடைக்குமா நிம்மதி? என்று ஏங்கி அலைபவர்க்கு இன்முகம் காட்டி ஈடற்ற இன்பங்களை வழங்குவது விளையாட்டுக்களாகும்.

எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! Continue reading “வாழ்க்கையும் விளையாட்டும்”

விளையாட்டு அர்த்தமும் விளக்கமும்

விளையாட்டு அர்த்தமும் விளக்கமும்

விளையாட்டு அர்த்தமும் விளக்கமும் என்ற இந்தப் பகுதி எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

விளையாட்டின் அர்த்தம்

அர்த்தம் உள்ளவைகள் தாம் விளையாட்டுக்கள். அப்படி இருப்பதால் தாம் மனிதகுல ஆரம்பத்திலிருந்தே ஆர்ப்பாட்டமாகத் தோன்றி, உயிரூட்டமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன; படர்ந்து கொண்டிருக்கின்றன. Continue reading “விளையாட்டு அர்த்தமும் விளக்கமும்”

விளையாட்டுகள் – அர்த்தம் புரிகிறது

அர்த்தம் புரிகிறது

ஆண்டவன் படைப்பிலே அத்தனைப் பொருட்களும் அர்த்தம் உள்ளவைகளாகவே விளங்குகின்றன. அர்த்தம் இல்லாத பொருட்களோ அல்லது அவசியம் இல்லாத பொருட்களோ இந்த உலகில் எதுவுமே இல்லை.

ஒருவருக்கு உபயோகப்படுகின்ற பொருட்கள் மற்றவர்களுக்குத் தேவையற்றதாகத் தோன்றலாம். தீமை பயப்பதாக கூடத் தெரியலாம்.  இந்த உலகத்திலே இருக்கவே கூடாது என்றும் கூட மற்றவர்கள் அகற்ற முயலலாம்.

தனக்குத் தேவையில்லை என்பதனாலேயே அதனைத் தரம் தாழ்த்திப் பேசுவது என்பது தரமுள்ள மனிதர்களுக்கு அழகில்லை. தேவையில்லாமல் தற்போது தெரிகின்ற பொருட்கள், இன்னும் சிறிதுகாலம் கழித்துக் கண்கண்ட தெய்வமாகக் கூட உதவலாம்.

அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு போகின்றவர்கள் தான் அறிவாளிகள் ஆவார்கள்.

ஆரவாரித்துக்கொண்டு அலட்சிய நோக்குடன், தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று குதர்க்கம் பேசுவோர்கள் அறிவிலிகளாகத் தான் வெளிப்படுவார்கள்.

தேவையில்லாத ஒன்று என்றும் தூரத்தே தள்ளிவைக்கப் பட வேண்டிய ஜ‌ந்து என்றும் விளையாட்டுக்களைப் பற்றிப் பேசுவோர்களும், இப்படித்தான் அறிவிலிகளாகத் திகழ்ந்து கொள்கிறார்கள். Continue reading “விளையாட்டுகள் – அர்த்தம் புரிகிறது”

அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்

அர்த்தமுள்ள விளையாட்டுகள்

அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூல், பெருமதிப்பிற்குரிய எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த, நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

அந்த நூலின் அருமையான கட்டுரைகள், வரும் வாரங்களில் நமது இனிது இணைய இதழில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.

ஆசிரியர்  அவர்கள் எழுதிய முன்னுரையை இந்த வாரம் படியுங்கள்.

முன்னுரை

அர்த்தம் உள்ளவைகள் தாம், ஆறறிவு படைத்த மனிதர்களிடையே ஆனந்தமான வரவேற்பைப் பெறுகிறது.

அர்த்தம் இல்லாத பொருள் எத்தனை தாம் விலை உயர்ந்தவைகளாக இருந்தாலும், வரவேற்கப்படுவதில்லை. மாறாக, விலக்கப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் மதிப்புக்கும், துதிப்புக்கும் மூலப்பொருளாக இருந்து வருபவை விளையாட்டுக்கள் தாம்.

அவைகள் எப்படி எப்படியெல்லாம் மனித இனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் சஞ்சீவிப் பொருளாக விளங்கி வருகின்றன என்கிற கருத்துக்களைத்தான் அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்னும் இப்புத்தகத்தில் விவரித்துள்ளேன். Continue reading “அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்”