விரைக, உயர்க, வலிமை பெறுக

விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

விரைக, உயர்க, வலிமை பெறுக என்று விளையாட்டுகள் நமக்கு வாழ்க்கைப் பண்பினைச் சொல்லிக் கொடுக்கின்றன‌ என்கிறார் பேராசிரியர் நவராஜ் செல்லையா அவர்கள்.

மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிரலாபித்துக் கொண்டே வாழ்கின்றார்கள். வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகின்றார்கள். இதுதான் மனித வரலாறு தருகின்ற வருத்தமான காட்சி.

கோடி கோடியாக மனிதர்கள் பிறக்கின்றார்கள், கூடிகூடி வாழ்ந்தவாறு, கோடியிலே கிடந்து, வாடி வதங்கி, அழுது புலம்பி, இளைத்துக் களைத்து, இறந்து போய் இருந்த இடத்தைக் காலி செய்து விடுகின்றார்கள்.

பூத உடல் போனாலும் புகழுடல் இந்தப் பூதலத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள்தான் புத்திசாலிகள்.

வரம் பெற்று வாங்கி வந்த இந்த மனித உடலை, புனித உடலாக மாற்றிப் புகழ் பெற்று இறப்பவர்கள்தான் பெருமை பெற்றவர்கள் ஆவார்கள்.

அப்படி நினைக்காதவர்கள் நிலை, மண்ணுக்கும் அதில் கிளம்பி மறையும் புழுதிக்கும் கீழ்தான், பாழ்தான்.

‘தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்று வள்ளுவர் பாடிச் சென்றார்.

 

‘தோன்றிற் பொருளோடு தோன்றுக – அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’

என்று சமுதாய தர்மமாக பாட வேண்டிய நிலைமை இன்று நம்மிடையே நிறைந்து கிடக்கிறது.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று பாடியது உண்மைதான்.

பணம் இல்லாதவன் பிணம் என்ற பழமொழி நூற்றுக்கு நூறு இன்று பொருந்துகிறது. காரணம் – நமது சமுதாய அமைப்பு அப்படி மாறிப்போய் கிடக்கிறது. Continue reading “விரைக, உயர்க, வலிமை பெறுக”

ஆயத்தம் அவசியம்

ஆயத்தம் அவசியம்

ஆயத்தம் அவசியம் என்ற கட்டுரை, விளையாட்டு எப்படி நமக்கு வாழ்க்கைக்கான ஆயத்தத்தைச் சொல்லிக் கொடுக்கின்றது எனக் காட்டுகின்றது.

மனிதப் புதிர்

எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் ஒருநாள் என் நண்பர் ஒருவரை வழி அனுப்பி வைப்பதற்காகச் சென்றிருந்தேன்.

இரவு மணி 9 இருக்கும். வண்டி புறப்படுவதற்குக் கடைசி மணி அடித்தாகி விட்டது. ஒரு குடும்பம் அவசரம் அவசரமாக ஸ்டேஷன் உள்ளே நுழைந்தது. Continue reading “ஆயத்தம் அவசியம்”

பந்து தரும் பண்பாடு

கால்பந்து

பந்து தரும் பண்பாடு என்ற கட்டுரை, விளையாட்டு மைதானத்தில் இருக்கும் பந்து, எப்படி நமக்கு வாழ்க்கைக்கான பண்பாட்டைச் சொல்லிக் கொடுக்கின்றது எனக் காட்டுகின்றது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் இரண்டு அணிகள் உண்டு. இரண்டு அணியினருமே பந்தினைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ளத் தான் முயல்கின்றனர்.

பந்தை வைத்திருப்பவர்கள் தாக்கப்படுகின்றார்கள்; தேக்கப்படுகின்றார்கள்; தடுக்கப்படுகின்றார்கள்; இடிக்கவும் படுகின்றார்கள். Continue reading “பந்து தரும் பண்பாடு”

ஜீவமரணப் போராட்டம் – விளையாட்டுக்கள்

ஜீவமரணப் போராட்டம்

ஆகாய வெளியில் ஓர் அற்புதமான காட்சி.

ஆவேசமாக சிறகுகளை விரித்துக் கொண்டு, ஆர்ப்பரித்தவாறு பறக்கின்றது கழுகுக் கூட்டம். இரைச்சலை உண்டாக்கி அவைகளிடையே பாய்ச்சலை ஏற்படுத்தியது எது?

ஒர் இறைச்சித் துண்டு. Continue reading “ஜீவமரணப் போராட்டம் – விளையாட்டுக்கள்”

தனிநபர் விளையாட்டுகளின் வகைகள்

டென்னிஸ்

தனிநபர் விளையாட்டுகளின் வகைகள் 12 உள்ளன. அத்தனையும் தனி ஒருவருக்குத் தருகின்ற சிறப்பு வாய்ப்புக்களாகும். அவை பற்றித் தெரிந்து கொள்வோம்.

Continue reading “தனிநபர் விளையாட்டுகளின் வகைகள்”