யார் தலைவன்?

நரி

யார் தலைவன் என்பது வலிமை கொண்ட மக்கள் எப்படித் தந்திரவாதிகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதைச் சொல்லும் கதை.

நரி ஒன்றிற்கு காட்டின் தலைவனாக வேண்டும் என்ற ஆசை நெடுநாள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் நரி காட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே புலி ஒன்று வந்தது. புலியோ மிகவும் பசியுடன் இருந்தது. அதற்கு அன்றைக்கு எந்த விலங்கும் அகப்படவில்லை. Continue reading “யார் தலைவன்?”

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விடவேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

அந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌ தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

Continue reading “தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்”

பெரிய கோழியின் விலை

பெரிய கோழியின் விலை

முன்பு சீன தேசத்தில் சிங்-சாங்-சூங் என்பவர் கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். அவர் அக்கிராமத்தின் நீதிபதியாக இருந்து வந்தார். அவர் ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக் கூறுவார்.

அவரிடம் புதிய வழக்கு ஒன்று வந்தது.

அக்கிராமத்தில் அப்பாவியான விவசாயி ஒருவன் கனமான மூட்டை ஒன்றை தூக்கும்போது கைதவறி விட்டுவிட்டான். Continue reading “பெரிய கோழியின் விலை”

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

அது ஓர் அழகிய வனம். அதில் நரி ஒன்று புதரில் வாழ்ந்து வந்தது. நரியின் இருப்பிடமானது கொடிய புலியின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்தது. Continue reading “ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது”

கருமி புதைத்த பணம்

வடுவூர் என்ற ஊரில் கந்தன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பணக்காரனாகவும், மகா கருமியாகவும் இருந்தான். அவன் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாக்க எண்ணினான்.

எனவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக்கினான். அந்த பணத்திற்கு எல்லாம் தங்கக் கட்டிகளை வாங்கினான்.

தங்கக் கட்டிகளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பது எப்படி? என்று எண்ணிய அவனுக்கு திடீரென ஒரு எண்ணம் உதித்தது. Continue reading “கருமி புதைத்த பணம்”