குமரனின் குறும்புத்தனம் – சிறுகதை

குமரனின் குறும்புத்தனம்

ஆனந்தூர் என்ற ஊரில் உள்ள பள்ளியில், குமரன் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். குமரன் அவனுடைய வகுப்பில் மிகவும் குறும்புத்தனம் நிறைந்தவன். ஆனால் திறமைசாலி.

அவனுடைய வகுப்பாசிரியர் சண்முகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், குமரன் துடுக்குத்தனத்தை நிறுத்தவில்லை.

குமரனுடைய பிறந்தநாள் மறுநாள் வரவிருந்தது. Continue reading “குமரனின் குறும்புத்தனம் – சிறுகதை”

நாய்களின் நட்பு – சிறுகதை

நாய்களின் நட்பு

நாய்களின் நட்பு கதை போலி நட்பு பற்றிப் பேசுகிறது.

சில மனிதர்கள் மற்றவர்களுடன் போலியாக நட்பு கொள்வர். அவர்களை இனம் கண்டு ஒதுங்குவது நல்லது.

இவ்வகையான மனிதர்களின் நட்பானது இக்கதையில் வரும் நாய்களின் நட்பு போன்றது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம். Continue reading “நாய்களின் நட்பு – சிறுகதை”

நான்கு பொம்மைகள் – சிறுகதை

நான்கு பொம்மைகள்

நான்கு பொம்மைகள் கதையிலிருந்து நாம் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குமாரதேசம் என்ற நாட்டை தெய்வசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தார். மன்னருக்கு மணிசேனன் என்ற மகன் இருந்தான்.

அவ்விளவரசனுக்கு பதினாறு வயது நிரம்பி இருந்தபோது காலன் என்கின்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார்.

மன்னரைப் பார்த்து இளவரசன் மணிசேனனுக்கு நான்கு பொம்மைகள் பரிசளிக்க விரும்புவதாக முனிவர் காலன் தெரிவித்தார். Continue reading “நான்கு பொம்மைகள் – சிறுகதை”

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.

ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.

மணிதான் தலைவர்.

தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.

சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.

கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். Continue reading “ரசிகர் மன்றம்”

யார் சீடன்? – சிறுகதை

யார் சீடன்

யார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்! பயன் பெறுங்கள்!

கரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.

யாரிடம் கல்வி கற்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர். Continue reading “யார் சீடன்? – சிறுகதை”