Tag: நீருடன் ஓர் உரையாடல்

நீர் உயிர்கள் பலவற்றிற்கு இன்றியமையாதது. ஆனால் நாம் நீர் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறோம்?

வாருங்கள்! நீருடன் ஓர் உரையாடல் செய்வோம்.

இது நீர் பற்றிய நல்ல கட்டுரைகள் அடங்கிய தொடர். கனிமவாசன் என்ற பெயரில் முனைவர் ஆர்.சுரேஷ் அவர்கள் எழுதியவை.

  • குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50

    குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50

    மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.

    பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.

    தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.

    (மேலும்…)
  • கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49

    கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49

    அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சட்டென எழுந்தேன். சுவர் கடிகாரம் மணி 5.10 எனக் காட்டியது.

    ′காலைல யாரா இருக்கும்?!′ என்று எண்ணியபடியே விரைவாக சென்று அலைப்பேசியை பார்த்தேன்.

    எண்கள் தான் தெரிந்தன. யாரென தெரியவில்லை. அலைபேசி அழைப்பை ஏற்றேன்.

    ″சார், கழிவு நீர் வண்டி வருது″ எனக் கூறி வீட்டிற்கு வருவதற்கான வழியைக் கேட்டார் அந்த நபர். நானும் வழி சொன்னேன்.

    (மேலும்…)
  • உலக நீர் நாள் – நீருடன் ஓர் உரையாடல்  48

    உலக நீர் நாள் – நீருடன் ஓர் உரையாடல் 48

    ஜீன் 05. உலகச் சுற்றுச்சூழல் நாள். அன்று காலையில் இருந்தே எனக்கு பல்வேறு நிகழச்சிகள் இருந்தன.

    முதலில் நீர் மாசுபாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான ஒரு ஆய்வரங்கத்தில் கலந்துக் கொண்டேன்.

    அதன் பின்னர், காணொலி வாயிலாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ′புதிப்பிக்க கூடிய ஆற்றல் வளங்கள்′ பற்றிய உரை நிகழ்த்தினேன்.

    அடுத்து மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இருந்தது. அதுவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்தது தான்.

    (மேலும்…)
  • நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47

    நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47

    சில அடிப்படை வேதியியல் கருதுகோள்கள், விதிகள், மற்றும் தத்துவங்கள் ஆகியனவற்றை நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டிருந்தேன்.

    தாகம் எடுத்தது. நீர் பருகினேன்.

    ″போதுமா சார்?″ – நீர் கேட்டது.

    ″நீர் தானே?″

    ″ஆமாங்க…″

    (மேலும்…)
  • நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46

    நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46

    வீட்டிற்குள் நுழைந்தவுடன், முதுகில் மாட்டியிருந்த பையை கழட்டி அதிலிருந்து புத்தகங்களை எடுத்து மேசையில் வைத்தேன்.

    புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் தான் அவை. புத்தகங்கள் எல்லாம் அறிவியல் சார்ந்தவையே.

    புத்தகங்களை உடனே புரட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

    ‘சரி முதல்ல குளிச்சிட்டு பிறகு வாசிக்கலாம்’ என்று முடிவு செய்தேன்.

    சில நிமிடங்களில் புத்துணர்வு பெற்றுக் கொண்டு எனது அறைக்கு வந்தேன்.

    (மேலும்…)