தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.
Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”வித்தி வான் நோக்கும் வியன்புலம் – நூல் மதிப்புரை
வித்தி வான் நோக்கும் வியன்புலம் நூல் ஆசிரியர் திரு.பெ.ரவீந்திரன் அவர்கள், த.மு.எ.க.ச.வின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் என் முதல் மாணவரும் ஆகிய திரு. ஆர்.ரெங்கசாமி அவர்கள் மூலம் கிடைத்த நல்ல நண்பர் ஆவார்.
அவர் மூலம் ஒருவாரத்திற்கு முன் கிடைப்பதற்கு அரிய இந்த நூலும் என் கையில் கிடைத்தது. இந்நூல் பற்றிய என் பார்வையை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.
Continue reading “வித்தி வான் நோக்கும் வியன்புலம் – நூல் மதிப்புரை”மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்
“எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன். மனிதத் துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்து கொள்கிறேன். ஆறுதல் தருகிறேன். மோசமான செயல்களை அழித்து ஒழிக்கிறேன். என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே,” என்கிறார் இஸ்மத் சுக்தாய்.
இஸ்மத் சுக்தாய் அவர்கள் உருது மொழியில் எழுதிய சிறுகதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘மச்சம்’ எனும் சிறுகதையாகும். இக்கதையைத் தமிழில் ராகவன் தம்பி மொழிபெயர்த்துள்ளார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாக அது இருக்கின்றது.
Continue reading “மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்”தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை
தமிழ் பிள்ளைத் தமிழ் நூல், தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகத் தமிழ் மொழியைக் குழந்தையாகப் பாவித்து, மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.
கீழ்க்கண்ட இணைப்பில் இணையத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும்.
https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
Continue reading “தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை”எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது
எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்‘ எனும் நூல், பொதிகை மின்னல் கலைக்கூடம் வழங்கும் சிறந்த கட்டுரை நூல் விருது பெற்றது.
விருது பெற்ற எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.
Continue reading “எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது”