கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?

கருப்பு உளுந்து லட்டு

கருப்பு உளுந்து லட்டு உடலுக்கும் எலும்புக்கும் வலுவினை உண்டாக்கும் சத்தான உணவு ஆகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.

இரும்புச் சத்து, கால்சியம் சத்து, ஜிங்க் சத்து உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்களை இது உள்ளடக்கியுள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும்.

Continue reading “கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?”

காராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி?

காராமணி / தட்டைப்பயறு குழம்பு

காராமணி / தட்டைபயறு குழம்பு எளிதில் செய்யக்கூடிய சுவையான குழம்பு ஆகும். இதற்கு காராமணி எனப்படும் தட்டைப் பயறு பயன்படுத்தப்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்த இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

இதனை சாதம், சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். காரடையான் நோன்பின் போது அம்மனுக்குப் படைக்கப்படும் இனிப்பு அடை, உப்பு அடை இரண்டிலும் காராமணி சேர்த்து செய்யப்படுகிறது.

Continue reading “காராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி?”

காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்

காராமணி (தட்டைப்பயறு)

காராமணி என்றதும் காரடையான் நோன்புக்கு படைக்கப்படும் அடை செய்வதற்கு பயன்படும் பயறு என்பதே என்னுடைய நினைவிற்கு சட்டென்று வருகிறது.

இதனை நாம் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்றும் கூறுகிறோம். தட்டைப்பயறு, கத்திரிக்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படும் பயற்றுக் குழம்பு நம் ஊரில் மிகவும் பிரலமான ஒன்று.

இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்”

துவரை – ஓர் உன்னத உணவு

துவரை

துவரை நம்முடைய பராம்பரிய சமையலான சாம்பாரில் சேர்க்கப்படும் முக்கியமான மூலப்பொருளாகும். இது பரவலாக கெட்டியாகப் பருப்பாக வைத்து நெய் அல்லது மிளகு ரசத்துடன் உண்ணப்படுகிறது. Continue reading “துவரை – ஓர் உன்னத உணவு”

கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை நம் நாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுப் பொருள். பெரும்பாலும் எல்லா கடவுளர்களின் வழிபாட்டிலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.

இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.

Continue reading “கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு”