சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை

பலவருடம் முன்பாக நாங்களெல்லாம் ஒன்றாக
யாரோ ஒருவர் கட்டிவைத்த பெருவீட்டுப் பரனொன்றில்
அங்கங்கே சேர்த்துவைத்த குப்பைக் குச்சிக்கொண்டு
அழகான கூடுகட்டி மகிழ்வாக வாழ்ந்தோமே!!

Continue reading “சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை”

புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை

கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே

கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே

வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்

ரெட்டைவாலினைக் காணவுமில்லையே

Continue reading “புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை”

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள் என்ற தலைப்பு உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். பறவைகளின் தனித்தன்மையே பறப்பதுதான். ஆனால் பறக்காத பறவைகளும் உலகில் இருக்கின்றன.

பறக்காத பறவைகள் ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகள், தென் துருவப்பகுதி, தென் அமெரிக்காவின் பாம்பஸ் புல்வெளி, ஆஸ்திரேலியாவின் காடுகள் மற்றும் நியூசிலாந்து தீவுகளில் காணப்படுகின்றன.

பொதுவாக பறவைகள் வேட்டையாடும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உணவினைத் தேடவும், தங்கள் சந்ததிகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் பறக்கின்றன.

Continue reading “பறக்காத பறவைகள்”