தாமரை குறும்படம் விமர்சனம்

தாமரை குறும்பட விமர்சனம்

தாமரை குறும்படம் ஊனமுற்ற மன நோயாளி மகளைக் கொண்ட ஒரு தாயின் பாசப் போராட்டத்தை எடுத்துக் காட்டுகிறது.

பிறப்பின் அதிசயங்களில் அங்கக் குறைபாடும் ஒன்று. அதன் மூலமாகத் தொடர் பிணைப்புகளுள் ஏற்படும் சொல்ல முடியாத துயரங்களும் வேதனைகளும் பல திறத்தன.

Continue reading “தாமரை குறும்படம் விமர்சனம்”

பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை

ஒரு நாள்

மரங்கள் பழங்களாக

விதைகளைத் தந்துவிட்டுத்

தூர நின்று பார்த்தன

மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று

Continue reading “பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை”

தர்மா குறும்படம் விமர்சனம்

தர்மா குறும்படம்

பெரிய தத்துவார்த்தமான கருத்தை, இரண்டு நிமிடத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் காட்டி, மனதுக்குள் புகுத்தி விட முடியுமா?

வசனமற்ற முறையில் ஆயிரம் வார்த்தைகளுக்கான வெளிப்பாட்டைக் கூறி விடத்தான் முடியுமா?

இசையும் காட்சியும் தீர்த்து விட முடியாத பக்கங்களில் உள்ளீடுகளை அச்சாணி போல் பிறரில் பதிந்து விடச் செய்ய முடியுமா?

உலக நியதிகளின் தாத்பரியத்தைப் பொட்டில் அடித்தார் போல் காட்சிகளால் புலப்படுத்தி விட முடியுமா?

‘முடியும்’ என்கிறது தர்மா குறும்படம். இரண்டு நிமிட தொலைபேசியில் எடுக்கப்பட்ட குறும்படம்.

குறும்படம் வசனமே இல்லாத நல்லதொரு குறும்படம். ஆனால் 3 மணி நேரம் ஓடும் படம் தராத கருத்தை, அனுபவத்தை, சுகத்தை இக்குறும்படம் தருகின்றது.

Continue reading “தர்மா குறும்படம் விமர்சனம்”