யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி “உலகிலுள்ள எல்லா ஊர்களும் நமது ஊரே; உலக மக்கள் எல்லோரும் நம் உறவினரே” என்னும் நல்ல கருத்தை நம் மனதில் விதைத்தவர் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றன்.

உலகிலுள்ளார் அனைவரும் இன்புற்றிக்க வேண்டும் என்பதே அருளாளர்களின் கோட்பாடாகும்.

வள்ளுவர் உள்ளத்திலும் இக்கருத்து வளர்ந்திருந்தது. தமிழ்ச் சான்றோர்களின் கனவே இதுதான். Continue reading “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?

இலக்கியம்

இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டுமே உணரக் கூடிய ஓர் இன்பம். இலக்கியங்களை நாம் வாசிப்பதும் அசை போடுவதும் நம் மனதைப் பண்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.

இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும். Continue reading “இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?”

பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிதாசன்

தனது புரட்சிகரமான கருத்துக்களை இனிமையான பாடல் வரிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் புரட்சி கவி என்றழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். Continue reading “பாவேந்தர் பாரதிதாசன்”