தாயின் மணிக்கொடி பாரீர்

இந்திய தேசியக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்

உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே

பாங்கின் எழுதித் திகழும் -செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! Continue reading “தாயின் மணிக்கொடி பாரீர்”

தீராத விளையாட்டுப் பிள்ளை

கிருஷ்ண ஜெயந்தி

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத) 

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) Continue reading “தீராத விளையாட்டுப் பிள்ளை”

பெண்கள் விடுதலைக் கும்மி

பெண்கள் விடுதலைக் கும்மி

பெண்கள் விடுதலைக் கும்மி பாடும் நாள் மார்ச் 8.

தமிழகப் பெண்கள் இன்று இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறி இருக்கின்றார்கள்.

அதற்குக் காரணம் பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குரல் ஒலிக்கத் துவங்கியது தான்.

 “மாற்றத்தை உருவாக்கத் தைரியமாக இருங்கள்” என்பது தான் இந்த வருடத்தின் உலக பெண்கள் தினத்தின் குறிக்கோள்.

இந்தத் தைரியத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ப் பெண்களிடம் ஊட்டிய நம் தேசிய கவி பாரதி பாடும் ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ எப்படி இருக்கின்றது என்று பாருங்களேன். Continue reading “பெண்கள் விடுதலைக் கும்மி”

காதல் பாட்டு

காதலர்கள்

குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) Continue reading “காதல் பாட்டு”

தண்ணீர் விட்டா வளர்த்தோம்?

இந்தியா

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ? (சுதந்திர தாகம்)

விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….

மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?

– மகாகவி பாரதியார்