பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன‌?

பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன?

மாத்தி யோசி என்பதுதான் அது.

வழக்கமான சிந்தனை என்பதைப் பெட்டிக்குள் சிந்திப்பது (Thinking inside the box) என்று சொல்வார்கள்.

வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, புதிதாக மாற்றி யோசிப்பதை பெட்டிக்கு வெளியே சிந்திப்பது (Thinking outside the box) என்பார்கள்.

16.02.2022 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர்களுடன் “பெட்டிக்கு வெளியே சிந்திப்போம்” எனும் தலைப்பில் விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Continue reading “பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன‌?”

அங்குளிமால் – ஆன்மீக கதை

அங்குளிமால்

ஒருசமயம் பகவான் சேத வனத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் பிரசேன ஜித் என்ற அரசனது இராச்சியத்தில் அங்குளிமால் என்று ஒரு திருடன் இருந்தான்.

அவன் மிகவும் கொடியவன்; எதற்கும் துணிந்தவன்; அடிதடிக்கும், கொலைக்கும் அஞ்சாதவன். அவன் நெஞ்சில் சிறிதும் இரக்கம் இருந்ததில்லை. அவன் எத்தனையோ கிராமங்களைச் சூறையாடியும் மக்களைக் கொன்றும் பாழாக்கியிருக்கிறான். Continue reading “அங்குளிமால் – ஆன்மீக கதை”

அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?

அன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்.

சித்தார்த்தர் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகன். சித்தார்த்தர் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.

ஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காலடியில் ‘தொப்’ என ஏதோ ஒன்று விழுந்தது. Continue reading “அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?”

மௌன மொழி

மௌன மொழி

இனி உலகின் பொது மொழியான மௌன மொழி பற்றிய ஒரு கதை.

மனிதன் தனது ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ள, மௌனவிரதம் இருக்கிறான். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றமாகும். Continue reading “மௌன மொழி”

தம்மபதம் – புத்த சமய அற நூல்

தம்மபதம்

தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.

எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.

கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.

ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.

Continue reading “தம்மபதம் – புத்த சமய அற நூல்”