திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?

திருவிழா

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது சில குறிப்பிட்ட நாள்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது ஆகும். இதனை உற்சவம், ஊர்வலம் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருவிழாவின் முக்கிய கோட்பாடே ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும்.

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர்.

திருவிழாக்கள் ஓர் இடத்தில் உள்ள மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. Continue reading “திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?”

குற்றாலம் வாருங்கள்

குற்றாலம்

குற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். Continue reading “குற்றாலம் வாருங்கள்”