Tag: மருத்துவ பயன்கள்

  • பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்

    பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்

    பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம். (மேலும்…)

  • தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா என்ற இது அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

    இப்பாடல் இன்றைய காலகட்டத்திற்கும் உடல்நலத்தைப் பாதுகாக்க‌ பொருந்துவதாக உள்ளது. இத்னைக் குறித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வாருங்கள் பாடலைக் காண்போம். (மேலும்…)

  • மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

    மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

    வணக்கம்!

    இதை என்னுடைய முதல் எழுத்து, முதல் பதிவு அல்லது முதல் கட்டுரை என‌ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    எப்பொழுதும் போல் இணைய உலா வரும்போது, தங்க‌ள் இனிது இணையத்தை பார்க்க இறைவன் என்னைப் பணித்தான்.

    அதில் எப்படி எழுதுவது எதை எழுதுவது என்று எனக்காகவே முதலில் அந்த பக்கத்தை இறைவன் காண்பித்தான்.

    என் முதல் எழுத்து வெளியிடுவதற்கு தகுதியுண்டு என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

    என்னைப் பொறுத்த வரை கீரைகளின் ராஜா   மஞ்சள் கரிசலாங்கண்ணி.

    நான் கிராமத்தில் என் தாயுடன் வயல் ஓரங்களிலும் ஏரிகளிலும் மற்றும் திறந்த வெளிகளிலும் சுற்றித் திரிந்தவன். அது வெறும் சுற்றல் அல்ல. மிகப் பெரிய கல்வி என்பதை இப்போது உணர்கிறேன்.

    ஏன் தெரியுமா? (மேலும்…)

  • கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா

    கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா

    கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா என்றதும் ஏதோ என்று நினைகிறீர்களா?. அது ஒன்றும் இல்லை. நாம் அன்றாடம் மசாலா தயாரிக்க பயன்படுத்தப்படும் மல்லிவிதை ஆகும்.

    இது மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால்தான் இது மூலிகை மசாலா என்றழைக்கப்படுகிறது.

    மல்லிவிதை இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் இது நம்நாட்டில் அந்தளவுக்கு சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.

    எங்கள் வீட்டில் யாருக்காவது சளிப் பிடித்து விட்டால் எங்கள் அம்மா சுக்கு மல்லிக் காப்பி தயாரித்துக் கொடுப்பார். ஏனெனில் அதற்கு சளி தொந்தரவு குறைவதோடு அதனால் உண்டாகும் உடல்வலியும் நீங்கும்.

    கொத்தமல்லியில் சிறப்பு என்னெவென்றால் இதனுடைய இலை மற்றும் விதைகள் நம்மால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையில் கொத்தமல்லி விதை பற்றி விரிவாகப் பார்ப்போம். (மேலும்…)

  • ஏலக்காய் – மசாலாக்களின் ராணி

    ஏலக்காய் – மசாலாக்களின் ராணி

    ஏலக்காய் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மணம் ஆகும்.

    உலகில் உள்ள விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் இது வெண்ணிலா மற்றும் குங்குமப்பூவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

    இது நம் நாட்டில் பராம்பரியமாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இது வெறும் வாயில் போட்டு மெல்லப்படும் இயற்கை சுவாசப் புத்துணர்வுப் பொருளாகவும் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. (மேலும்…)