இந்தியாவின் பீடபூமிகள் அதன் மொத்த பரப்பளவான 32 லட்சம் சதுர கிமீ-ல் 16 லட்சம் சதுர கிமீ பரப்பளவினை கொண்டுள்ளன. இங்குள்ள பீடபூமிகளின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 600-900 மீட்டர் ஆகும்.
இந்தியாவில் பொதுவாக ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன. இது பொதுவான சாய்வைக் குறிக்கிறது.
நர்மதை, தபதி, மாஹி ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
இந்தியாவின் பீடபூமிகள் பூமியில் உள்ள பழமையான நிலவமைப்பு ஆகும். இது பெரும்பாலும் ஆர்க்கியன் கெய்னிஸ் மற்றும் ஸ்கிஸடுகளால் ஆன மிகவும் நிலையான தொகுதி ஆகும். (மேலும்…)