தினம்தினம் தண்ணீர் தினம்

தினம்தினம் தண்ணீர் தினம்

கண் இமைக்காமல்

பார்க்க வைக்கும் கடலே

அழகாய் வீழும் அருவிகளே

நளினமாய் ஓடும் நதிகளே

ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே

குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே

கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே

அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே

இவையனைத்தும் நீ தானே

இவையனைத்தும் நீ தானே

Continue reading “தினம்தினம் தண்ணீர் தினம்”

நீருடன் ஓர் உரையாடல் 1 – மழைத்துளி

மழைத்துளி

பேருந்தில் இருந்து இறங்கியவுடன், எனது நடையில் வேகத்தைக் கூட்டினேன். காரணம், மழை மேகங்கள் படையெடுத்து பெருமழைப் பொழிவிற்கான சமிக்ஞையை தந்து கொண்டிருந்தன.

சில மீட்டர் தூரம் கடந்தவுடன் ‘டொக்கென’ தலையில் ஏதோ விழுந்தது. மேல் நோக்கிப் பார்க்க, சில மழைத்துளிகள் எனது முகத்தில் ‘டொக் டொக்கென’ விழுந்தன.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 1 – மழைத்துளி”

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.  அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. 

குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தவளை கத்தினால் தானே மழை

மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.
Continue reading “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”