தினம்தினம் தண்ணீர் தினம்

தினம்தினம் தண்ணீர் தினம்

கண் இமைக்காமல்

பார்க்க வைக்கும் கடலே

அழகாய் வீழும் அருவிகளே

நளினமாய் ஓடும் நதிகளே

ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே

குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே

கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே

அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே

இவையனைத்தும் நீ தானே

இவையனைத்தும் நீ தானே

Continue reading “தினம்தினம் தண்ணீர் தினம்”

மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1

மழைத்துளி

பேருந்தில் இருந்து இறங்கியவுடன், எனது நடையில் வேகத்தைக் கூட்டினேன். காரணம், மழை மேகங்கள் படையெடுத்து பெருமழைப் பொழிவிற்கான சமிக்ஞையை தந்து கொண்டிருந்தன.

சில மீட்டர் தூரம் கடந்தவுடன் ‘டொக்கென’ தலையில் ஏதோ விழுந்தது. மேல் நோக்கிப் பார்க்க, சில மழைத்துளி எனது முகத்தில் ‘டொக் டொக்கென’ விழுந்தது.

Continue reading “மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1”