குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50

குடிநீர்

மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.

பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.

தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.

Continue reading “குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50”

கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49

கழிவு நீர்

அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சட்டென எழுந்தேன். சுவர் கடிகாரம் மணி 5.10 எனக் காட்டியது.

′காலைல யாரா இருக்கும்?!′ என்று எண்ணியபடியே விரைவாக சென்று அலைப்பேசியை பார்த்தேன்.

எண்கள் தான் தெரிந்தன. யாரென தெரியவில்லை. அலைபேசி அழைப்பை ஏற்றேன்.

″சார், கழிவு நீர் வண்டி வருது″ எனக் கூறி வீட்டிற்கு வருவதற்கான வழியைக் கேட்டார் அந்த நபர். நானும் வழி சொன்னேன்.

Continue reading “கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49”

மனிதன் என்னும் பேய்க்கூட்டம்

இயற்கையின் இன்ப சரித்திரத்தில்
பூமியும் ஒன்று

அது அண்டத்தின் அழகான திருவுருவம்
ஆற்றல் நிரம்பிய பேருருவம்

Continue reading “மனிதன் என்னும் பேய்க்கூட்டம்”

சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை

சப்தமும் இரைச்சலும்

மனிதன் இன்று இரைச்சலும் சப்தமும் சூழ்ந்த சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கு காணினும் சப்தம், இரைச்சல்.

பொழுது புலர்ந்தது முதல் தலைதூக்கும் இந்த பிரச்சனை, நாள் முழுக்கத் தொடர்ந்து இரவு ஆகியும் தீராமல் மனித வர்க்கத்தை ஆட்டிப் படைக்கிறது.

இரண்டு சக்கர வாகனங்ககள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், பேருந்து, ரேடியோ, டி.வி., தொழிற்சாலை யந்திரங்கள், ரயில், மைக் மூலம் ஏற்படுத்தப்படும் சப்தம் என பல்வேறு வகைகள் மூலம் சப்தத்தின் இம்சை தாங்க முடியாமல் நாம் அன்றாடம் தவித்து வருகிறோம். இதுவே ஒலி மாசுபாடு ஆகும்.

Continue reading “சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை”