முதலை – ஊர்வன அரசன்

முதலை
முதலை என்றதும் அதனுடைய விரிந்த வாயும் கோரமான பற்களுமே ஞாபகத்திற்கு வரும். ஊர்வன வகையைச் சார்ந்த இவ்விலங்கு அபார தாக்கும் திறனும் வலிமையான கடிக்கும் திறனும் கொண்டுள்ளதால் ஊர்வன அரசன் என்று அழைக்கப்படுகிறது.

முதலையினம் சுமார் 24 கோடி ஆண்டுகளாக இப்பூமியில் வசித்து வருகின்றது. அதாவது டைனோசர்கள் வாழ்ந்த மெசோசோயிக் சகாப்தத்திலிருந்து முதலைகள் இப்புவியில் வாழ்ந்து வருகின்றன.

Continue reading “முதலை – ஊர்வன அரசன்”

பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்

பவளப் பாறைகள்

பவளப் பாறைகள் கடலின் அடிப்பரப்பில் காணப்படும் அழகான சூழலமைப்பு ஆகும். இவை கடலடித் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பல்வகை உயிர்சூழல் உருவாகவும், அவை பாதுகாப்பாக இருக்கவும் இவை மிகவும் அவசியமானவை.

இவை மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களில், தேன்கூடு, மரம், மாபெரும் விசிறிகள், மூளை, மான் கொம்புகள் போன்ற வடிவங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

Continue reading “பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்”

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

உலகில் எல்லா உயிரினங்களும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெற்றுள்ளது.

சில உயிரிகள் நோய், மோசமான காலநிலை, உணவு பற்றாக்குறை, வாழிடமிழப்பு ஆகியவற்றால் அவற்றின் சராசரி வாழ்நாளைவிட  விரைவாக இறக்கின்றன.

சிலமனிதர்கள்  100 வயது வரை வாழ்கின்றனர்.

உலகில் பல உயிரினங்கள் 100 வயதினையும் தாண்டி வாழ்கின்றன. இனி நீண்ட காலம் உயிரினங்கள் பற்றிப் பார்ப்போம்.

Continue reading “டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்”

கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்

கங்கை டால்பின்

இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா?

கங்கை டால்பின் தான்.

டால்பின் பொதுவாக மனிதர்களிடம் நெருங்கிப் பழகும். டால்பின் அடிக்கும் குட்டிக்கரணம் எல்லோருக்கும் பிடிக்கும். டால்பின் பொதுவாக கடலில்தான் இருக்கும். Continue reading “கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்”

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

நீந்தும் வாத்து

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை

1. நிலவாழ் விலங்குகள்

2. நீர்வாழ்விலங்குகள்

3. இருவாழ்விகள்

4. மரங்களில் உள்ள விலங்குள்

5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”