மிளகு என்னும் மசாலா அரசன்

மிளகு

மிளகு என்னும் மசாலா அரசன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இது இல்லாமல் எந்த மசாலாவும் பூர்த்தி பெறாது. எனவேதான் இது மசாலாக்களின் அரசன் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ குணங்கள் மிக்கதாகவும் விளங்குகிறது.

இது உலகெங்கும் நறுமணப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், உணவில் சுவை கூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “மிளகு என்னும் மசாலா அரசன்”

உதவாத காடு – சிறுகதை

உதவாத காடு

“ஐயா, ஐயா” என்று வாசலுக்கு வெளியில் நின்று கூப்பிட்டான் சண்முகம்.

“யாரு தம்பி?” என்றபடி வெளியே வந்தார் குமரைய்யா.

“நான் சண்முகம், மேலத்தெரு பரஞ்சோதி மகன்.”

“என்னப்பா, வீட்ல எல்லாரும் சௌக்கியமா?”

“எல்லாரும் நல்லாயிருக்காங்கய்யா.”

“உள்ளே போகலாம் வா” என்றபடி உள்ளே சென்றார். வீட்டிற்குள்ளிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

Continue reading “உதவாத காடு – சிறுகதை”

100 ரூபாய் – சிறுகதை

100 ரூபாய்

“யம்மா, ஒரு 100 ரூபாய் கொடேன். மதுரயில இன்டர்வியூக்கு போய்யிட்டு வந்துரேன்” கெஞ்சலாகக் கேட்டான் குமார்.

“போடா, உனக்கு வேலயில்ல. எப்பப் பாத்தாலும் இன்டர்வியூக்குப் போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு சொல்லிக்கிட்டு.” என்றபடி அரிசியைக் களைந்து உலையில் போட்டாள் செல்லத்தாய். Continue reading “100 ரூபாய் – சிறுகதை”

ப்ரெண்ட்ஸ் – சிறுகதை

ப்ரெண்ட்ஸ்

மதுரையில் அலுவலக மீட்டிங் முடித்து விட்டு பெரியார் பேருந்து நிலையத்தில், மாட்டுத்தாவணி செல்லும் பேருந்திற்காக அன்றில் காத்திருந்தபோது 22 ஏ பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி 2-வது சீட்டில் அமர்ந்து மாட்டுதாவணிக்கு டிக்கட் வாங்கினாள்.

கல்லூரியில் பயிலும்போது ஒருநாள் இந்த 22 ஏ பஸ்ஸை பிடிக்க தான் பட்ட கஷ்டங்களையும், அன்றைய நிகழ்வு கற்பித்த பாடமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

1999-ம் வருடம் நடந்த நிகழ்வுகள் இன்றும் நினைவில் அப்படியே நிற்கின்றன. பழையவைகளை அப்படியே அசைபோட்டாள் அன்றில்.

Continue reading “ப்ரெண்ட்ஸ் – சிறுகதை”

கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?

கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?

கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா? கேள்விக்கான பதில் தெரிய வேண்டும் எனில் தொடர்ந்து படியுங்கள்.

மழையும், குளிரும் தொடங்கியாச்சு. கொசுக் கடிக்கும் இனி பஞ்சம் இருக்காது. குறிப்பிட்ட சிலரை மட்டும் கொசு அதிகமாக கடிக்கும். Continue reading “கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?”