சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

குருவிகள் எல்லாம் வந்த வழியே மீண்டும் பயணித்துக் கொண்டிருந்தன.

சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்பு மீண்டும் அந்த மனித குடியிருப்புகள் தென்பட்ட பகுதியினை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.

“அந்த ஏரி எங்காவது தென்படுகிறதா?” என இருன்டினிடே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற குருவிகளும் அவ்வாறே ஏரியை தேடிக் கொண்டிருந்தன. Continue reading “சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு”

சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்

பயணத்தில் தடுமாற்றம்பயணத்தில் தடுமாற்றம்

அது அகண்ட ஆறு. நீளமும் மிக அதிகம். அது, அருகிலிருந்த ஒரு மலை உச்சியில் பிறந்து, பள்ளத்தாக்கு வழியே பாய்ந்து பன்னெடுங்காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆற்றின் அக்கரையில் உயர்ந்த மரங்கள் எண்ணற்ற அளவில் இருந்தன. இக்கரையில் மணற்பரப்பு விரவி இருந்தது.

அதையடுத்த மேட்டுப் பகுதியில் புதர்ச் செடிகள் மண்டியிருந்தன. ஆங்காங்கே குட்டை மரங்களும் இருந்தன. Continue reading “சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்”

சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்

பயணத்தில் திடீர் தடங்கல்

மலை உச்சியிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரம் ஆயிற்று. இன்னும் அவற்றின் தாயகமான வடதுருவப் பகுதி எல்லையில்தான் அக்குருவிக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.

மழை இல்லை. மழை மேகங்கள் இல்லை. நீல வானம் பளிச்சிட்டது. மங்கிய சூரிய ஒளிக்கதிர்கள் சூரியன் அஸ்தமனமாகப் போவதை உணர்த்தின. Continue reading “சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்”

புதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை

புதிய பிளாஸ்திரி

புதிய பிளாஸ்திரி ‍என்ற‌ அறிவியல் குறுங்கதை, மருத்துவத் துறையில் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி விளக்குகிறது.‌

 

“கணி, வேல இருக்காப்பா?”

“சொல்லுங்கம்மா.”

“மரத்துல முருங்கை காயெல்லாம் முத்துன மாதிரி இருக்கு. அப்படியே விட்டா வீணாப் போயிடும்”

“சரிம்மா… கொஞ்ச நேரத்துல போய் பறிச்சிட்டு வரேன்.” Continue reading “புதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை”

நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியுமா?

நகத்தின் பயன் பற்றி தெரியுமா?

நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

“கணி, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

(வளர்ந்த விரல் நகத்தை வெட்டிக் கொண்டே)

“வாங்க வேதி… எப்படி இருக்கீங்க…?” Continue reading “நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியுமா?”