மண் வாயு – வளியின் குரல் 3

மண் வாயு

வணக்கம் மனிதர்களே! இன்று காலை, ஆகாயத்தில் தவழ்ந்த படி பூமியை சில நிமிடங்கள் பார்த்தேன்.

நான் பார்த்த அந்த இடம் ஒரு பெருநகரம் என்று நினைக்கிறேன்.

Continue reading “மண் வாயு – வளியின் குரல் 3”

காற்று – வளியின் குரல் 2

காற்று - வளியின் குரல் 2

“நல்லா இருக்கீங்களா? என்னை யாருன்னு தெரியலையா? நான் தான் வளி.

இம்… இன்னைக்கு நான் பேசுவதற்கு காரணம் நீங்க தான். எப்படீன்னு கேட்குறீங்களா? சொல்றேன்.

Continue reading “காற்று – வளியின் குரல் 2”

வாயு – வளியின் குரல் 1

வாயு - வளியின் குரல்

“அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே? நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் பேச விழைகிறேன்.

‘பேசுற‌து யாரு?’ என நீங்கள் திகைக்கிறீர்களா?

குழப்பமோ, திகைப்போ வேண்டாம். நான் தான் வாயு. ஆங்கிலத்தில் ′gas′ என அழைப்பீர்களே, அதுவே தான். எனக்கு ′வளிமம்′ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கடந்த சில நாட்களாகவே, நான் உங்களிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன.

சரி, நான் கூறப்போவதை கேட்பீர்களா?

Continue reading “வாயு – வளியின் குரல் 1”

குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50

குடிநீர்

மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.

பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.

தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.

Continue reading “குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50”

கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49

கழிவு நீர்

அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சட்டென எழுந்தேன். சுவர் கடிகாரம் மணி 5.10 எனக் காட்டியது.

′காலைல யாரா இருக்கும்?!′ என்று எண்ணியபடியே விரைவாக சென்று அலைப்பேசியை பார்த்தேன்.

எண்கள் தான் தெரிந்தன. யாரென தெரியவில்லை. அலைபேசி அழைப்பை ஏற்றேன்.

″சார், கழிவு நீர் வண்டி வருது″ எனக் கூறி வீட்டிற்கு வருவதற்கான வழியைக் கேட்டார் அந்த நபர். நானும் வழி சொன்னேன்.

Continue reading “கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49”