நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47

நீர் தத்துவம் - நீருடன் ஓர் உரையாடல் − 47

சில அடிப்படை வேதியியல் கருதுகோள்கள், விதிகள், மற்றும் தத்துவங்கள் ஆகியனவற்றை நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டிருந்தேன்.

தாகம் எடுத்தது. நீர் பருகினேன்.

″போதுமா சார்?″ – நீர் கேட்டது.

″நீர் தானே?″

″ஆமாங்க…″

Continue reading “நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47”

நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46

நீரும் நாகரிகமும்

வீட்டிற்குள் நுழைந்தவுடன், முதுகில் மாட்டியிருந்த பையை கழட்டி அதிலிருந்து புத்தகங்களை எடுத்து மேசையில் வைத்தேன்.

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் தான் அவை. புத்தகங்கள் எல்லாம் அறிவியல் சார்ந்தவையே.

புத்தகங்களை உடனே புரட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

‘சரி முதல்ல குளிச்சிட்டு பிறகு வாசிக்கலாம்’ என்று முடிவு செய்தேன்.

சில நிமிடங்களில் புத்துணர்வு பெற்றுக் கொண்டு எனது அறைக்கு வந்தேன்.

Continue reading “நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46”

நீர் ஆற்றல் – நீருடன் ஓர் உரையாடல் 45

நீர் ஆற்றல்

′அந்த பூங்காவிற்குச் செல்ல வேண்டும்′ என்று கடந்த சில நாட்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்.

காரணம், புதிதாக திறக்கப்பட்ட அந்தப் பூங்காவில் அனைவரையும் கவரும் பல அம்சங்கள் இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். அத்தோடு பூங்கா, வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது.

பள்ளிப் பருவ காலத்தில் நண்பர்களுடன் பூங்காவிற்கு சென்றிருக்கிறேன். பல வருடங்கள் உருண்டோடி விட்டன. தற்போது தான், ′புதிய பூங்காவிற்குச் செல்ல வேண்டும்′ என்ற எண்ணம் என்னுள் தோன்றியிருக்கிறது.

Continue reading “நீர் ஆற்றல் – நீருடன் ஓர் உரையாடல் 45”

நீர் தீயணைப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 44

நீர் தீயணைப்பான்

ஏதோ கருகுவதுப் போல் தோன்றியது.

உருளைக்கிழங்கு பொரியல் அடுப்பில் இருப்பது நினைவிற்கு வரவே, சட்டென சமையலறைக்கு சென்று, அடுப்பில் இருந்த வாணலியை பார்த்தேன்.

பொரியலில் நீர் அவ்வளவாக இல்லை. அவசரத்தில் இடுக்கி அகப்படவில்லை. ஆனால் ஒரு துணி இருந்தது.

Continue reading “நீர் தீயணைப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 44”

நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

நீர் விளையாட்டுகள்

மேல் அலமாரியில் இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன்.

பல நாட்களாக, இல்லை இல்லை, பல மாதங்களாக அதை நான் பிரித்து பார்க்கவே இல்லை. அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று கூட எனக்கு அப்போது நினைவில்லை.

Continue reading “நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43”