நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

நீர் விளையாட்டுகள்

மேல் அலமாரியில் இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன்.

பல நாட்களாக, இல்லை இல்லை, பல மாதங்களாக அதை நான் பிரித்து பார்க்கவே இல்லை. அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று கூட எனக்கு அப்போது நினைவில்லை.

Continue reading “நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43”

நீர் உலகம் – நீருடன் ஓர் உரையாடல் 42

நீர் உலகம்

காகிதம், எழுதுகோல் உள்ளிட்ட எழுது பொருட்களை வாங்கி வந்தேன். எல்லாவற்றையும் எடுத்து அதற்குறிய இடத்தில் வைத்தேன்.

‘உலக உருண்டையை எங்கு வைக்கலாம்’ என்று யோசித்தேன். ‘சரி மேசையிலேயே வச்சிப்போம்’ என்று தோன்றியது.

உடனே அட்டைப் பெட்டியை பிரித்து அதிலிருந்த அந்த மாதிரி உலக உருண்டையை எடுத்து மேசையில் ஒரு ஓரத்தில் வைத்தேன். சுண்டி விட, சில நிமிடங்கள் உருண்டை சுழன்ற பின்னர் நின்றது.

Continue reading “நீர் உலகம் – நீருடன் ஓர் உரையாடல் 42”

நீர் நிறம் – நீருடன் ஓர் உரையாடல் 41

மலை, ஆறு, மரங்கள், செடிகொடிகள், பறவைகள், மேகம், சூரியன் உள்ளடங்கிய வழக்கமான இயற்கை காட்சியை ஒருவழியாக கரிக்கோலால் (pencil) வரைந்து முடித்தேன்.

பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் வரைகிறேன்.

இன்று நான் வரைந்த ஓவியம் சுமாராக இருக்கிறது.

“இதுக்கு கலர் அடிச்சா நல்லா இருக்குமே” என்று தோன்றியது.

Continue reading “நீர் நிறம் – நீருடன் ஓர் உரையாடல் 41”

நீர்த் தாரை இயந்திரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் 40

நீர்த் தாரை இயந்திரம்

குண்டானில் ஊற வைத்திருந்த இட்லி அரிசியை எடுத்து ஈரமாவு அரவைப் பொறியில் போட்டேன். பின்னர் போதுமான அளவு நீரை ஊற்றி பொத்தானை அழுத்தினேன். சட்டென அரவைப் பொறி இயங்கத் தொடங்கியது. நீரும் அரிசியும் ஒன்றாக கலக்கத் தொடங்கியது.

சார், சார் – நீர் என்னை அழைத்தது.

Continue reading “நீர்த் தாரை இயந்திரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் 40”

நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39

நீர் பொழுதுபோக்கு

மீன் தொட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கநிற மீன்களும், கருப்புநிற மீன்களும் ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தன.

சிறுமீன்கள் தொட்டியின் அடிப்பாகத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த சிறு கற்களுக்கிடையே அவ்வப்பொழுது பதுங்கியிருந்து, பின்னர் மீண்டும் மேலெழுந்து திரிந்தன.

ஒருவேளை அவைகள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனவோ? என்னவோ! தெரியவில்லை.

ஆனால் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

Continue reading “நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39”