நீரியல் வளர்ப்பு‍ – நீருடன் ஓர் உரையாடல் 38

நீரியல் வளர்ப்பு‍

வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, பையை திறந்து அதிலிருந்த மணி பிளான்ட் செடியை எடுத்து வெளியே வைத்தேன்.

நண்பர் ஒருவர் தான் எனக்கு இச்செடியை தந்தார். அவர் சொன்னபடி ஒரு பெரிய கண்ணாடி குடுவையை எடுத்து தூய்மை செய்து, தண்ணீரால் நிரப்பினேன்.

பிறகு அந்தச் செடியை அந்த குடுவையில் வைத்தேன். ‘எங்கு வைக்கலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

Continue reading “நீரியல் வளர்ப்பு‍ – நீருடன் ஓர் உரையாடல் 38”

நீர் பிளவு – நீருடன் ஓர் உரையாடல் 37

நீர் பிளவு

ஒரு வழியாக தேங்காய் மட்டையை உரித்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக நாரையும் பிரித்து விட்டேன்.

தேங்காய் பெரிதாகவும் கனமாகவும் இருந்தது. சமையலறைக்குள் சென்று ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து வந்தேன்.

Continue reading “நீர் பிளவு – நீருடன் ஓர் உரையாடல் 37”

நீர் நுண்துளி – நீருடன் ஓர் உரையாடல் 36

நீர் நுண்துளி

மதியம் பன்னிரெண்டு மணி இருக்கும். சமையல் முடிந்தது. மேடையை சுத்தம் செய்துவிட்டேன். சுழன்று கொண்டிருந்த உறிஞ்சு மின்விசிறியை அணைத்தேன்.

சமையலறையில் நிசப்தம் ஏற்பட்டது.

அப்பொழுது தான் உணர்ந்தேன், அந்த ‘டொக்… டொக்…’ எனும் மெல்லிய ஒலியை.

Continue reading “நீர் நுண்துளி – நீருடன் ஓர் உரையாடல் 36”

நீரின் வடிவம் – நீருடன் ஓர் உரையாடல் 35

நீரின் வடிவம் - நீருடன் ஓர் உரையாடல் 35

அண்மையில் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன்.

அது எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்களைக் கண்டறியும் முறையைப் பற்றிய கட்டுரை.

அப்பொழுது சில கரிமச் சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாடுகளை ஒரு தாளில் வரைந்து கொண்டிருந்தேன்.

″சார், சார்…″ – குரல் உரக்கக் கேட்டது.

‘தண்ணீர் குடுவையில் இருக்கும் நீரின் குரல் தான் அது’ என்பதை நான் உணர்ந்தேன்.

Continue reading “நீரின் வடிவம் – நீருடன் ஓர் உரையாடல் 35”

உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34

உருகிய நீர்

குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு தான் நேரம் கிடைத்தது. இந்த வேலையை அப்பொழுது தொடங்கினேன்.

முதலில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தேன்.

அப்பொழுது தான் தோன்றியது, ஐஸ்பெட்டியைத் திறக்க வேண்டும் என்று. உடனே முயன்றேன்; முடியவில்லை.

அந்த பெட்டி முழுவதும் பனிக்கட்டிகள் உருவாகி இருந்ததால், பெட்டியின் கதவை திறக்க முடியாமல் போயிற்று.

Continue reading “உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34”