தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

உலகத்திலுள்ள மொழிகளில் எல்லாம் பழமையான மொழி நம் தமிழ்மொழி என்று பலரும் கண்டறிந்து கூறியிருக்கின்றனர். ஓலைச்சுவடி முதல் கணிப்பொறியின் இணையம் வரை தமிழ் தன் தடத்தைப் பதிக்கிறது.

காலத்திற்கு ஏற்ப மொழி தன்னைப் புதுப்பிக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்துபவர்கள்தான் கவிஞர்கள். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று பெரும் பிரிவுகளாக தமிழைப் பிரித்துள்ளனர்.

Continue reading “தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்”

காலம் போற்றும் கவிஞர்கள்

கண்ணதாசன்

மனிதன் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தப் பயன்பட்டது மொழி ஆகும். எழுத்து மொழி, பேச்சு மொழி, செயல் மொழி என்று மொழியாளர்களும் மற்றும் ஒலியின் அளவை வைத்து அதை 1 மாத்திரை, 1/2 மாத்திரை என்று ஒலியிலாளர்களும் கூறுவதாக மொழி வரலாறு கூறுகிறது.

உலகில் உள்ள மொழிகளையெல்லாம்

உயர்வால் நானும் மதிக்கின்றேன்

தலைமைத் தன்மையை அவரவர் மொழிக்கு

சாற்றுபவர் தம்மைத் துதிக்கின்றேன்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை நான் வாசித்த கவிஞர் உலகநாதனின் வரிகள் ஆகும்.

Continue reading “காலம் போற்றும் கவிஞர்கள்”