கந்தனைக் கண்டேன்!

கந்த சஷ்டி திருவிழா

கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்

பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்

Continue reading “கந்தனைக் கண்டேன்!”

விரதம் எடுப்பவர்கள் கவனத்திற்கு

பாதயாத்திரை

சிலபேர் பழனி முருகனுக்கும், சிலபேர் திருச்செந்தூர் முருகனுக்கும், சிலபேர் ஐயப்பனுக்கும், முப்பது நாற்பது நாட்கள் காலையில் குளித்து விட்டு விரதம் இருந்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு இருக்கிறார்கள். அது நல்லது தான்.

Continue reading “விரதம் எடுப்பவர்கள் கவனத்திற்கு”

திருத்தணிகை நொண்டிச் சிந்து

முருகன்

கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்

மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே

Continue reading “திருத்தணிகை நொண்டிச் சிந்து”

பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

பங்குனி மாத சிறப்புகள்

பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன. Continue reading “பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள் நம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும்  தருபவை. முருகன் பக்தி பாடல்கள் சிலவற்றைக் கீழே காணுங்கள். அவற்றைப் பாடி மகிழுங்கள்!

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

 

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்

தேவியவ‌ள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்

குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல் Continue reading “முருகன் பக்தி பாடல்கள்”