Tag: ரக்சன் கிருத்திக்

ரக்சன் கிருத்திக் மனதைத் தொடும் கதைகளை எழுதுவதில் வல்லவர். எளிய மனிதர்களின் அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை ஆவணப்படுத்துவதாக அவரின் கதைகள் அமைந்திருக்கின்றன.

  • தகவலின் ஊடே வந்த நினைவுகள் – சிறுகதை

    தகவலின் ஊடே வந்த நினைவுகள் – சிறுகதை

    ‘சண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்’ என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

    ‘சில ஆண்டுகளுக்கு முன் அவனது மகன் வெளிநாடு சென்றுவிட்டான். புதியதாக இரண்டு அடுக்கு மாளிகை கட்டி விட்டான்’ என்ற தகவல் வந்தபோது ‘என் மகனே சென்றது போலவும், நானே வீடு கட்டி விட்டது போலவும்’ சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

    மற்றவர் பார்வையில் அவன் எப்படியோ எனது பார்வையில் எனக்கு அவன் நல்ல‌வன்தான். சிறுவயது நண்பன் அல்ல, இருபது ஆண்டுகளாகதான் அவனை எனக்கு தெரியும்.

    (மேலும்…)
  • சைக்கிள் – சிறுகதை

    சைக்கிள் – சிறுகதை

    ‘சைக்கிள் வாங்குவது’ என்பது அருணகிரியின் குழந்தைகள் ஒவ்வொருத்தருடைய பல வருட‌ கனவு.

    ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் எல்லோரும் படித்தார்கள்.

    முதலாவதாக அந்த பள்ளியில் போய் சேர்ந்தது மூத்த மகன்  இசக்கி. அடுத்து இரண்டு ஆண்டுகள் சென்று இரண்டாவது மகன் வேலன்.

    இவ்வாறு இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் போய் அந்த பள்ளியில் சேர்ந்தார்கள். கடைசியாக கடைக்குட்டி கல்யாணியும் வந்து சேர்ந்தாள். 

    (மேலும்…)
  • வாய் முகூர்த்தம் – சிறுகதை

    வாய் முகூர்த்தம் – சிறுகதை

    இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

    என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

    எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

    வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

    அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

    நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

    (மேலும்…)
  • இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை

    இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை

    மாலை நேரத்தில் சுமார் நாலரை மணி அளவில், வேலை விசயமாக வெளியூருக்கு செல்ல இருந்த‌ என் நண்பன் அரவிந்தை வழியனுப்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் அவனுடன் நின்று கொண்டிருந்தேன்.

    அரவிந்த் செல்ல வேண்டிய பேருந்துக்கு முன்னதாக நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 515F என்ற தடத்தில் ஓடும் பேருந்து, நாங்கள் நின்று கொண்டிருந்த அதே நிறுத்தத்தில் வந்து நின்றது.

    பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பேருந்தில்தான் நான் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.

    (மேலும்…)
  • அவமானம் – சிறுகதை

    அவமானம் – சிறுகதை

    தார் வெட்டப்பட்ட வாழை மரத்தில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருந்தது.

    பழனிவேலு வாழை பயிரிடப்பட்டிருந்த வயலின் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தான்.

    இரண்டாயிரத்து சொச்ச வாழைகள் பயிரிடப்பட்டிருந்ததில், கால்பகுதி வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் இருந்தன‌.

    பாதிக்கும் மேற்பட்ட வாழைகள் குலை தள்ளியும் இருந்தன‌. சில வாழைக் குலைகள் அரைகுறை விளைச்சலிலும், இன்னும் சில வாழைக் குலைகள் நல்ல விளைச்சல் பருவத்திலும் இருந்தன‌.

    (மேலும்…)