துயரில்லை வாழ்வினிலே!

விநாயகர் வழிபாட்டுமுறை

ஓங்கார வடிவத்தில்
உறைந்தோனை உள்ளன்பால்
போற்றிவிட மாற்றம்தருமே – அந்த
ஆங்காரம் அறுந்தோடும்
அல்லலும் அனல்வீழும்
அழகான ஏற்றம்வருமே !

Continue reading “துயரில்லை வாழ்வினிலே!”

அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”

தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்

அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!

Continue reading “தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்”

வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி

அழகிய பிள்ளையார்

கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்

பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்

Continue reading “வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி”

நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்! – தா.வ.சாரதி

நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்
தும்பிக்கையான் பாதம் பணிவர்.

Continue reading “நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்! – தா.வ.சாரதி”