Tag: விநாயகர்

  • மூலதனம் – சிறுகதை

    மூலதனம் – சிறுகதை

    அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.

    (மேலும்…)
  • அழகிய பிள்ளையார்

    அழகிய பிள்ளையார்

    அழகிய பிள்ளையார் ஓவியம் வரைந்தவர் சக்தி பிரியா.

  • கோவிட்டு பிள்ளையாரு…

    கோவிட்டு பிள்ளையாரு…

    கோவிட்டு பிள்ளையாரு

    கொண்டாட போறதாரு?

    வாய்விட்டு பாட்டுப்பாட

    வாய்ப்பூட்டு பாரு பாரு! (மேலும்…)

  • பிறை சூடிய பிள்ளையார்

    பிறை சூடிய பிள்ளையார் அழகாக உள்ளார்.

  • ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

    ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

     

    ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்!

    அவனிருக்கும் தெருவெல்லாம் ஆடிபாடி சிரிக்கனும்!

    மூஞ்சுறுன்னு எலிவாகனம் அதுக்குஎன்ன கொடுக்கனும்!

    முற்றாத தேங்காயை உடைச்சுஅதுக்கு வைக்கனும்!

     

    வண்ணவண்ண தோரணங்கள் தெருத்தெருவா கட்டனும்!

    வாடாத அருகம்புல்லில் மாலைகட்டி சூட்டனும்!

    கண்ணங்கருத்த யானை அவனதோளில் சுமக்கனும்!

    கடைசியாக பச்சரிசி கொழுக்கட்டைய திங்கனும்!

     

    தந்தம்ஒன்று உடைஞ்சதுக்கு காரணத்தை கேட்கனும்!

    தரதரவென இழுத்துஅவன நடுவீதியில நிறுத்தனும்!

    முந்தையநம் வினைகளையே தீர்த்திடத்தான் கேட்கனும்!

    முழுநீள கரும்பெடுத்து அவனுக்கென்று படைக்கனும்!

     

    சந்தனமும் சவ்வாதும் தெருமுழுக்க மணக்கனும்!

    சந்தியில பொங்கலிட்டு ஊருக்கெல்லாம் கொடுக்கனும்!

    கந்தனுக்கு மூத்தவனை கண்மூடி துதிக்கனும்!

    காலம்முழுதும் குறைவின்றி அவனருளை கேட்கனும்!

    இராசபாளையம் முருகேசன்

    கைபேசி: 9865802942