யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா?

யானை துதிக்கை அதிசயங்கள்

நான் ஒரு சனிக்கிழமை மதியம், நெட் ஜியோ வொய்ல்ட் சானலில், ‘அனிமல் பைட் கிளப்’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு யானைக் கூட்டம் நீரோடையில் இறங்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

யானையின் பாதி உயரத்தை மறைக்கும் அளவுக்கு, அந்நீரோடையில் உயரமான புற்கள் நிறைந்து கிடந்தன.

திடீரென யானைக் கூட்டத்தில் இருந்த, குட்டிக்கும் பெரியதுக்கும் இடைப்பட்ட அளவில் இன்னும் தாயை விட்டுப் பிரியாத யானை ஒன்று, வேகமாக தலையை இங்கும் அங்குமாக அசைத்து சப்தம் இட்டது. அந்த யானையின் துதிக்கை வெளியே தெரியவில்லை.

தாய் யானையைத் தவிர கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் லேசாக பின்வாங்கின.

அப்போது யானையின் துதிக்கையை ஏதோ பிடித்து இழுக்கிறது என்று வர்ணனையாளர் கூறினார்.

அந்த யானை கஷ்டப்பட்டு துதிக்கையை வெளியே எடுத்தது. முதலை ஒன்று யானையின் துதிக்கையை கவ்வியபடி வெளியே தெரிந்தது.

Continue reading “யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா?”

நான் சிறுத்தை பேசுகிறேன்

நான் சிறுத்தை பேசுகிறேன்

என் பெயர் பத்மநாதன் (சிறுத்தை).

நான் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், என் வாழ்க்கையின் இறுதி தருணங்களில், என் கடைசி மூச்சை நிறுத்தும் வேளையிலாவது என் மனதின் பாரத்தைக் கூற எண்ணியே பேசுகிறேன்…

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சியில் வனவராகப் பணி புரிந்து வரும் திரு.ப.ராஜன் அவர்கள் ஆசிரியராக அமைய‌,

அவரின் நண்பர் செ.செங்கதிர் செல்வன் அவர்கள் கட்டுரைத் தொகுப்பாளராகச் செயல்பட‌,

பத்மநாதன் என்ற சிறுத்தையாகிய நான், என் வாழ்க்கை வரலாறைக் கூறப் போகிறேன்; என்னுடன் வாருங்கள்.

Continue reading “நான் சிறுத்தை பேசுகிறேன்”

நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?

நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?

என்னுடைய செல்ல நாய் வீட்டிற்கு வெளியே வந்த என் மகளை வேகமாகச் சென்று மூக்கால் உரசியது. உடனே என் மகள் “நாயோட மூக்கில இருந்த ஈரம் கைல ஒட்டிருச்சு” என்று அழுதாள். நானும் நாயின் மூக்கு ஈரமாக இருப்பதை அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

கால்நடை மருத்துவரிடம் நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் காரணங்கள் பல கூறினார். அதனையே உங்களுக்கு கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். Continue reading “நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?”

டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்

டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்

டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கோண்ட்வானா கண்டமானது பிரியத் தொடங்கியது. அவ்வாறு பிரிந்த கோண்ட்வானாவின் ஒருபகுதியானது, ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிக்காவை உள்ளடக்கியிருந்தது. Continue reading “டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்”

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஆப்பிரிக்கா சவானா புல்வெளி தனக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்கா சவானா வறண்ட குளிர்காலத்தையும், மழையுடன் கூடிய கோடை காலத்தையும் கொண்டுள்ளது.

ஆகையால் இங்குள்ள தாவர உண்ணிகள் உணவினையும் தண்ணீரையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.

Continue reading “டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்”