தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் எப்படி?

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் ஆரம்பமாக உள்ளது. ஒவ்வொரு முறையும், கடந்த முறை நடைபெற்றதைவிட அதிக சிறப்புடன் நடைபெறுவது, தேர்தல் திருவிழாவின் வழக்கம்.

எனவே இந்த முறையும், இதுவரை தமிழக வரலாற்றிலே நாம் கண்டிராத வகையில், மிகச்சிறப்பாகத் தேர்தல் திருவிழா அமையப் போவது உறுதி.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் தேர்தல் என்றாலே திருவிழாதான். ஆனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலம் அல்லவா? எனவே இங்கு தேர்தல் திருவிழா கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும்.

Continue reading “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் எப்படி?”

கலைமகள் – கவிதை

கலைமகள்

வெண்கமலம் மீதினிலே

வீற்றிருக்கும் பூமகளே

பண்ணிசைக்கும் வீணையொடு

பார்புகழும் கலைமகளே

என்மனதின் கோவிலுக்குள்

ஏற்றுகின்றேன் தீபமம்மா

பொன்மின்னும் தாரகையே

போற்றுகின்றேன் உன்னையம்மா Continue reading “கலைமகள் – கவிதை”