கலிய நாயனார் – தம் உதிரத்தால் விளக்கு எரிக்க முற்பட்டவர்

கலிய நாயனார்

கலிய நாயனார் தான் செய்துவந்த விளக்கெரிக்கும் தொண்டிற்கு தேவையான எண்ணெய் வாங்க இயலாததால் தம்முடைய உதிரத்தால் விளக்கு எரிக்க முற்பட்ட வணிகர்.

பண்டைய தொண்டை நாட்டில் இருந்த சிறந்த தலங்களுள் ஒன்று திருவொற்றியூர். கடலின் அருகே அமைந்த இந்த நெய்தல் நிலத் திருத்தலத்தில் உதித்தவர் கலியனார்.

பிறப்பிலேயே செல்வந்தரான அவர் தம்முடைய குலத்தொழிலான எண்ணெய் ஆட்டி விற்கும் வியாபாரத்தில் சிறந்து விளங்கி பெரும் செல்வந்தராக விளங்கினார்.

Continue reading “கலிய நாயனார் – தம் உதிரத்தால் விளக்கு எரிக்க முற்பட்டவர்”

மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை

மைக்கேல் தாத்தா

மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.

அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிட‌ந்தது.

Continue reading “மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை”

நம் இராமானுசர் – ஓர் பார்வை

நம் இராமானுசர் - ஓர் பார்வை

‘பொங்கிலங்கும் முப்புரி நூலோடு பாங்கெனப் பேசும் பொன் இவர் மேனி’ என்னும் படியாக, வடிவழகும் நடையழகும் கொண்ட பைந்துவராடைப் பேராசான் நம் இராமாநுசர்.

இக்காரேய் கருணை இராமாநுசரே பாமரரும் பேதையரும் பேருருவப் பெருமானை அறிந்து, புரிந்து, ஏற்று வணங்கிப் பேரருள் பெற்றிடப் பெரும் காரணராவார்.

காஞ்சி பெரிய பெருமானிடம் நித்தம் பேசும் திருக்கச்சி நம்பிகளிடம் பெரும் பக்தி கொண்டவர்.

Continue reading “நம் இராமானுசர் – ஓர் பார்வை”

Life – A Silent, Smart & Simple குறும்படம் விமர்சனம்

Life

வாழ்க்கை குறித்த புரிதலை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கு அதை விளங்க வைக்கும் குறும்படம் Life – A Silent, Smart & Simple.

வாழ்க்கை என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை. சிறு சிறு சந்தோஷங்களில் தான் உள்ளது என்பர்.

இக்குறும்படம் ஜென் கதைகளைப் போல் மிகச் சுருக்கமாக உள்ளது. குறும்படத்தில் எந்த வசனமும் இல்லை.

இவ்வளவு பெரிய விடயத்தை வசனமே இல்லாமல் விளக்கியிருப்பது ஒரு மாபெரும் அசாத்தியம்தான்.

Continue reading “Life – A Silent, Smart & Simple குறும்படம் விமர்சனம்”

திருநாவுக்கரசு நாயனார் – உழவாரத் தொண்டர்

திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் பாடிய‌ மூவரில் இரண்டாமவர். தம்முடைய அயராத உழவாரப் பணியால் உழவாரத் தொண்டர் எனப் போற்றப்படுபவர்.

இவர் கிபி ஏழாம் நூற்றாண்டில் தம்முடைய பாடல்கள் மூலம் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார் ஆவார்.

இவர் இறைவனைத் தலைவனாகவும், தம்மை அவர்தம் ஊழியனாகவும் கொண்டு தாச மார்க்கம் என்னும் வழியில் அன்பு செய்தவர்.

Continue reading “திருநாவுக்கரசு நாயனார் – உழவாரத் தொண்டர்”