மனிதன் என்னும் பேய்க்கூட்டம்

இயற்கையின் இன்ப சரித்திரத்தில்
பூமியும் ஒன்று

அது அண்டத்தின் அழகான திருவுருவம்
ஆற்றல் நிரம்பிய பேருருவம்

Continue reading “மனிதன் என்னும் பேய்க்கூட்டம்”

முனையடுவார் நாயனார் – போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தவர்

முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

முனையடுவார் நாயனார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் வசித்த வேளாளர். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு மற்ற பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறுபடையை உருவாக்கி வைப்பர்.

Continue reading “முனையடுவார் நாயனார் – போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தவர்”

பேராசைப் போர் – கவிதை

வருத்தம் கொண்டது கொரோனா
தனக்கே போட்டியாக வந்த
ரஷ்யப் படையால்

ஓட ஆரம்பித்தது கொரோனா
தன்னைவிடச் சிறந்த
வஞ்சகப் படையால்

மு.செந்தாமரைச் செல்வி

பரிசு வென்ற‌ கனேடிய தமிழ் எழுத்தாளர்கள்

கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் மூவர் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.

குரு அரவிந்தன்

எஸ்.பத்மநாதன்

ஆர்.என்.லோகேந்திரலிங்கம்

ஆகிய மூவரும், இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் இதழ் நடத்திய, மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.

Continue reading “பரிசு வென்ற‌ கனேடிய தமிழ் எழுத்தாளர்கள்”

புகழ்ச்சோழ நாயனார் – சிவனடியாருக்காக நெருப்பில் இறங்கியவர்

புகழ்ச்சோழ நாயனார்

புகழ்ச்சோழ நாயனார் தம்முடைய படைவீரர்களால் அழிக்கப்பட்ட பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திரிப்பதை கண்டதும், மனம் நொந்து தீயில் புகுந்த சோழ அரசர்.

புகழ்ச்சோழ நாயனார் சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து அரசாட்சி செய்து வந்தார். அவர் சிவன் மேல் பெரும் பக்தியும் பேரன்பும் கொண்டவராக விளங்கினார்.

புகழ்ச்சோழர் தம்முடைய படை வலிமையாலும் இறைவனின் திருவருளாலும் பல அரசர்களை வென்று மன்னர்மன்னராக விளங்கினார். இதனால் அவருக்கு வரி செலுத்தும் அரசர்கள் பலர் இருந்தனர்.

Continue reading “புகழ்ச்சோழ நாயனார் – சிவனடியாருக்காக நெருப்பில் இறங்கியவர்”