நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 12 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

கொஞ்சம் தயக்கதோடவே வாசல்படியில் நின்றார் ரத்தினவேல். “அடடே, ஏன் அங்கயே நிக்கிறீங்க? உள்ள வாங்க ரத்தினவேல்” ஊஞ்சலில் அமர்ந்திருந்த கதிரேசன் ஒரு மரியாதைக்குக்கூட எழுந்து வரவேற்காமல் உட்கார்ந்தபடியே ரத்தினவேலை வரவேற்றார். “அய்யா வணக்கம்!” கைகூப்பி கதிரேசனை வணங்கினார் ரத்தினவேல். பதிலுக்கு வணக்கம் சொல்லாத கதிரேசன் “ம்..ம்..ஒக்காருங்க.. ஒக்காருங்க” என்று தனக்கு இடதுபக்கம் கொண்டு வந்து போடப்பட்டிருந்த நாற்காலியில் ரத்தினவேலை அமரச் சொல்ல தயங்கினார் ரத்தினவேல். “அட! ஒக்காருங்க கணக்கு புள்ள, என்ன தயக்கம்? நாம சொந்தக்காரவுங்கதானே என்ன … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 12 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.