நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தாள் இந்து. வலதுகால் கணுக்காலிலிருந்து பாதத்தை மூடிக் கட்டுப் போடப்பட்டிருந்தது. அருகே மர நாற்காலி ஒன்றில் விசனத்தோடு அமர்ந்திருந்தார் ரத்தினவேல். “இந்து, இந்தும்மா! ரொம்ப வலிக்குதாடா கண்ணு.” “இல்லப்பா” “இந்துக்குட்டி, .அப்பா நாந்தான் மணி கொத்தனார்ட்ட ‘பாத, ‘கொதகொத’ன்னு மோசமா இருக்கு இந்துவ இன்னக்கி காலேஜு போக வேண்டாம்’னு சொல்லச் சொல்லி அனுப்புனேன்ல. அப்டியும் அப்பா பேச்சக் கேக்காம நீ ஏம் போன இந்துக்குட்டி. இப்ப பாரு காலு பெசகி எப்பிடி வீங்கிப் போயிருக்குனு, … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.