பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை. ஹாலில் சுற்றும் சீலிங் ஃபேனின் சன்னமான ஒலியைத் தவிர‌ வேறு எந்த சப்தமுமின்றி வீடு ‘கல்’லென்று அமைதியாய் இருந்தது. ஆனால் ஆனந்தியின் மனதில் அமைதி இல்லை. அது பௌர்ணமி நாளின் கடலலைப் போல் பொங்குவதும் வடிவதுமாய் எண்ண அலைகளால் அலைக்கழிக்கபட்டு அமைதியின்றி தவித்தது. செகன்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஆறுவயது மகன் அன்பரசு பள்ளிக்கும், அரசுப் பணியிலிருக்கும் கணவன் சுதாகர் அலுவலகமும் சென்றாகி விட்டது. பசித்தாலும் காலை டிபன் சாப்பிடப் பிடிக்கவில்லை. தலை வலிப்பதுபோல் … பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.