தனிக்குடித்தனம் – சிறுகதை

தனிக்குடித்தனம் - சிறுகதை

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என இரண்டு மாதங்களாகவே வித்யா, பாலனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது இந்த எண்ணத்தை மாற்ற பாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.

அப்பாவையும் அம்மாவையும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக விட்டுச் செல்ல பாலனுக்கு இஷ்டமில்லை.

‘இவளுக்கு என்ன குறைச்சல் இங்கே? அம்மா வித்யாவை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறாள். வித்யா வேலைக்குச் செல்வதைப் பற்றியும் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

Continue reading “தனிக்குடித்தனம் – சிறுகதை”

கூகுள் பே – தனிக் கவிதைகள்

கண்ணாடி

நம் பிம்பத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி – இவ்வுலகில் சிருஷ்டிக்கப்
படவில்லையெனில் நாம் தன்னலமற்று
வாழ்ந்திருப்போமோ என்று ஒரு சிந்தனை

Continue reading “கூகுள் பே – தனிக் கவிதைகள்”

வீரர்கள் தியாகம் – கவிதை

சமத்துவம் குடிகொண்டு

பொதுவுடைமை நிலை நின்று

சகோதரத்துவம் கை கோர்த்து

எள்ளளவும் தன்னலமின்றி

குதூகலிக்கும் குழந்தை உள்ளம்

இராணுவ வீரர் உள்ளம்

Continue reading “வீரர்கள் தியாகம் – கவிதை”

அழகான தீர்வு – சிறுகதை

அழகான தீர்வு - சிறுகதை

அன்று தொலைக்காட்சியில் கண்ட செய்தி மாணிக்கத்திற்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பள்ளியில் படிக்கின்ற மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை என்ற செய்திதான் அது.

அவரின் ஒரே மகள் மதியழகி பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள். மனம் கலங்கியது மாணிக்கத்திற்கு.

“அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வரேன்ப்பா” என்று துள்ளித் துள்ளி மகிழ்ச்சியாக சென்றாள் மதியழகி.

அன்றைய தினம் அம்மாவட்ட காவல்துறை பெண் அதிகாரி வருகை புரிந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் பற்றி விரிவாக விளக்கினார்.

Continue reading “அழகான தீர்வு – சிறுகதை”