காற்றில் அலையும் காதல்!

காற்றில் அலையும் காதல்

முத்து மேஜருக்கு வயது 58. இன்னும் இரண்டு வருடத்தில் ரிட்டயர்மென்ட்.

முத்து மேஜர் கிடையாது. பட்டாளத்தில் சாதாரண சிப்பாய்தான். அந்த காலத்தில் எதுவும் பெரிதாய் படிக்கவில்லை, துறை ரீதியான தேர்வும் எழுதவில்லை என்பதால் சிப்பாயாகவே காலம் தள்ளி விட்டார்.

ஆனால் 35 வருட அனுபவம். எத்தனையோ குண்டு வெடிப்புகள், தீவிரவாதிகளுடன் மோதல் என்று முத்து பார்க்காத பிரளயம் இல்லை; உடல் முழுவதும் ஏகப்பட்ட தழும்புகள்.

முத்து துப்பாக்கி சுடுவதில் வல்லவர். கிலோ கணக்கில் பதக்கங்களை வைத்திருப்பவர் அதனால் வரை எல்லோரும் ‘மேஜர்’ என்று அழைக்கிறார்கள். அதிகாரிகளுக்கும் வர் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு.

Continue reading “காற்றில் அலையும் காதல்!”

தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!

தண்ணீர் தேவை அன்றும் இன்றும்

தண்ணீர் தேவை என்பது ஒரு நாகரீக சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதை நமது தமிழ் சமூகம் அன்று எப்படிக் கையாண்டது; இன்று எப்படிக் கையாள்கிறது என்பதைத் தனது நேரடி அனுபவம் மூலம் எடுத்துச் சொல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

அன்றைக்கு ஒரு ஊர் நிர்மானித்தார்கள் என்றால் அந்த ஊருக்குத் தேவையான தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அதைச் சார்ந்த வேளாண் நிலங்கள், கால்நடைகள் மேய்க்க நிலங்கள் மற்றும் விளை பொருட்கள் சேகரித்து வைக்க களத்து மேட்டு நிலங்கள் என்று சுயசார்புடைய கிராமங்களை உருவாக்கினர்.

Continue reading “தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16

நாற்காலியொன்றில் அமர்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் எதிரிலிருந்த மேஜைமீது போட்டுக் கொண்டு உதடுகளில் சிகரெட்டொன்றைப் பற்ற வைத்து வளையம் வளையமாக புகையை வெளியேற்றிக் கொண்டும் சமயத்தில் புகையை விழுங்கி மூக்கால் வெளியேற்றிக் கொண்டும் படுஜாலியாக அமர்ந்திருந்த தனசேகரன் தோற்றத்தில் முற்றிலும் மாறிப் போயிருந்தான்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16”

தள்ளிப் போடாதே!

எதை செய்வதென்று குழம்பாதே! – அதுதான்

தள்ளிப் போடும் பழக்கத்தின் ஆரம்பப் புள்ளி

சரியான முடிவெடு – அதற்காக

சிறப்பான திட்டமிடு

Continue reading “தள்ளிப் போடாதே!”

பாடம் – கதை

“சினேகா! நீ மூணு மாசமா வீட்டு வாடகை கொடுக்கல. நீ வாடகை கொடுக்க முடியாதுனா வீட்டை காலி பண்ணு!” வீட்டு உரிமையாளர் சினேகாவிடம் சொன்னபோது அவள் முகம் அஷ்ட கோணலாகியது.

Continue reading “பாடம் – கதை”

கடவுள் மனிதனைப் படைத்த போது!

கடவுள் மனிதனைப் படைத்தபோது

கடவுள் முதன் முதலாக கழுதையைப் படைத்து, “நீ பூமியில் கழுதை என்ற பெயரில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பாய். பொதி சுமந்து கொண்டும் புற்களை உணவாகக் கொண்டும் எவ்வித அறிவும் சாதுரியமுமின்றி சுமார் 50 வருடங்கள் இருப்பாய்” என்று கூறினார்.

கழுதையோ “ஐயா, 50 வருடங்கள் ரொம்ப அதிகம். 20 வருடங்கள் போதுமே” என்றது.

Continue reading “கடவுள் மனிதனைப் படைத்த போது!”