புதுமைப் பெண் – சிறுகதை

புதுமைப் பெண்

நரேந்திரனின் முன் ஜாக்கிரதை உணர்வு விவரிக்க இயலாதது.

பேனா இரவல் கேட்டால் மூடியைத் தன்னிடம் வைத்துக்கொண்டு கொடுப்பதும், கோவிலில் காலணிகளை வெவ்வேறு இடங்களில் பிரித்துப்போட்டு பாதுகாப்பதும், வாட்ச் எவ்வித சேதமும் ஆகாமலிருக்க இடது மணிக்கட்டின் உட்புறமாகக் கட்டுவதுமாக தனது உடைமைகளை வெகு சிரத்தையுடன் பாதுகாத்துக் கொள்வான்.

அரசாங்க உத்தியோகத்தில் கை நிறைய சம்பளம். வங்கிகளில் கணிசமான சேமிப்பு. சொந்த வீடு, கார் என நல்ல வசதியுடன் கஷ்டமில்லாத வாழ்க்கை.

Continue reading “புதுமைப் பெண் – சிறுகதை”

நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை

நூற்றாண்டு தனிமை

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அப்பு பூமியில் தரை இறங்கினான். மூதாதையர்கள் கைவிட்டுப் போய்விட்ட பூமிக்கு, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்பு ஓராண்டு பயணத்துக்குப் பின், பற்பல கற்பனைகளுடன் வந்திருக்கிறான்.

“பூமியில எந்த உயிரினங்களும் இல்ல”

“மனுசன் பூமியில வாழ‌ற தகுதிய இழந்துதான் ஓடிப் போனான்”

Continue reading “நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை”

நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை

நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்

மார்க்கெட்டில் நுழைந்த மாணிக்கவேலு ஏதேச்சையாய் திரும்பியபோது தேங்காய் வாங்கிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்துவிட்டார்.

வழக்கமாய் காணப்படும் உற்சாகம் அவர் முகத்தில் இல்லை. வாட்டமுடன் அவர் காணப்படுவதைக் கண்டு குழம்பினார் மாணிக்கவேலு.

நேற்று அவர் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஏடாகூடமாக ஏதாவது சொல்லிவிட்டுப் போயிருப்பார்களோ?

Continue reading “நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை”