கல்விக் கோயில் – சிறுகதை

கல்விக் கோவில்

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார்.

“இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு.

அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து முடிவெடுக்கத்தான் கூடியிருக்கோம். ஆளுக்கொரு வசதியச் சொல்லுங்கப்பா.” Continue reading “கல்விக் கோயில் – சிறுகதை”

முளைப்பாரிப் பாடல்

முளைப்பாரி பாடல்

தன்னா னன்னே னானே தன

தானே னன்னே னானே

 

ஒண்ணாந்தான் நாளையிலே

ஒசந்த செவ்வா கிழமையிலே

ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து

ஓடும் பிள்ளை தொண்டலிட்டு Continue reading “முளைப்பாரிப் பாடல்”

வாய்விட்டு சிரிங்க – சிறுகதை

வாய்விட்டு சிரிங்க‌

வாய்விட்டு சிரிங்க என்ற கதை நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைச் செய்தியைச் சொல்கிறது.

சிரிப்பதும் சிரிக்க வைப்பதுமாக வாழ்கின்றவர்கள் மகத்தானவர்கள் என்பதே அது.

முன்னொரு காலத்தில் உப்பூர் என்ற ஊரில் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எப்போதும் தங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பிறரை சிரிக்க வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

தாங்கள் பிறந்ததே மக்களை சிரிக்க வைக்கத்தான் என்று கருதினர். Continue reading “வாய்விட்டு சிரிங்க – சிறுகதை”

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் என்ற பாடல்  பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் ஆகும். Continue reading “அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்”