ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை

ஆதுர சாலை ‍- நூல் விமர்சனம்

ஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.

(ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)

அலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.

கதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.

Continue reading “ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை”

எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்

எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா  புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். 

அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும்.

அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன.

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன்வர் தன் மனைவியின் பெயரான சுஜாதாஎன்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார்.

நாம் இக்கட்டுரையில் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புகளுள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்”

அறிவோம் தமிழ்ச் சொற்கள்

அறிவோம் தமிழ்ச் சொற்கள்

ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவே, இந்த அறிவோம் தமிழ்ச் சொற்கள் பகுதி. 

இன்றைக்கு பெரும்பாலும் பல பொருட்களின் பெயர்களை, நாம் ஆங்கிலத்திலேயே உச்சரிக்கின்றோம். அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை நாம் அறிந்து கொண்டு பயன்படுத்துவது, தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

படித்து பயன் பெறுங்கள்.

Continue reading “அறிவோம் தமிழ்ச் சொற்கள்”

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி என்ற‌ இக்கட்டுரையில் நாம் சிவசங்கரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் படைப்புகளில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

சிவசங்கரி சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவருடைய எழுத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், உத்வேகத்தை அளிப்பதாகவும் உள்ளது. Continue reading “சிகரம் தொட்ட‌ சிவசங்கரி”