காலம் போற்றும் கவிஞர்கள்

கண்ணதாசன்

மனிதன் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தப் பயன்பட்டது மொழி ஆகும். எழுத்து மொழி, பேச்சு மொழி, செயல் மொழி என்று மொழியாளர்களும் மற்றும் ஒலியின் அளவை வைத்து அதை 1 மாத்திரை, 1/2 மாத்திரை என்று ஒலியிலாளர்களும் கூறுவதாக மொழி வரலாறு கூறுகிறது.

உலகில் உள்ள மொழிகளையெல்லாம்

உயர்வால் நானும் மதிக்கின்றேன்

தலைமைத் தன்மையை அவரவர் மொழிக்கு

சாற்றுபவர் தம்மைத் துதிக்கின்றேன்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை நான் வாசித்த கவிஞர் உலகநாதனின் வரிகள் ஆகும்.

Continue reading “காலம் போற்றும் கவிஞர்கள்”

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

நான் நெல் விதைத்த விளைநிலம் எல்லாம்

இன்று வேலி அமைத்து வீடுகட்ட காத்திருக்கிறது

நான் குதித்து விளையாடிய குளங்களும் கிணறுகளும்

வற்றிப் போய் வானத்திடம் மழைக்காக வாதாடுகின்றன‌

Continue reading “அழிந்து கொண்டே போகிறது என் உலகம்”

எங்கள் வீடு – சிறுகதை

வீடு

எங்கள் வீடு, எங்கள் குடும்பத்தின் முக்கிய அடையாளம். ‘காரை வீட்டுக்காரங்க’ என்றே எங்களை ஊரில் அழைப்பர்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே, எங்கள் முன்னோர்கள் வீட்டின் கூரையை காரை மற்றும் தேக்கங்கட்டையால் கட்டியுள்ளனர்.

பூவானி கிராமத்தில் எங்கள் குடும்பம் ஓரளவு வசதி படைத்தது. அப்பா பக்கத்து டவுனில் ஷாப் கடை வைத்திருந்தார். சோப், பேஸ்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல்வேறு பொருட்களுக்கான மாவட்ட ஏஜென்ஸி அப்பாவின் வசம் இருந்தது.

Continue reading “எங்கள் வீடு – சிறுகதை”

சுயமியால் சுயமிழப்பவர்கள்

சுயமியால் சுயமிழப்பவர்கள்

தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது

தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…

முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்

அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…

Continue reading “சுயமியால் சுயமிழப்பவர்கள்”

வார்த்தைகளின் வீதி (அ) வெளி

வார்த்தைகளின் வீதி(அ)வெளி

வீதி முழுக்க மவுனம்

உச்சரிக்காமல் வர மறுக்கின்றன

வார்த்தைகள்

வீதி நுழைவதே

விலகிக் கிடக்கும் உள்ளங்களை

ஒருங்கிணைக்கத்தான்

Continue reading “வார்த்தைகளின் வீதி (அ) வெளி”