முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் தோசை

முடக்கத்தான் தோசை என்பது சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு ஆகும்.

முடக்கம் என்றால் தடை என்று அர்த்தம். உடலில் உண்டாகும் கைவலி கால்வலி போன்ற‌ முடக்கங்களை நீக்குவதால் இது முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது மருவி முடக்கத்தான் என்றானது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு முடக்கத்தான் சூப், முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் உள்ளிட்ட‌ உணவுகள் செய்யப்படுகின்றன.

முடக்கத்தான் கீரை சற்று கசப்புத்தன்மை உடையது. இதனை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றும் கீரையின் கசப்புத் தன்மை தெரியாது.

இனி சுவையான முடக்கற்றான் தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?”

தேடி வந்த தெய்வம்

தேடி வந்த தெய்வம்

மனநிறைவு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முத்தையா எவ்வாறு மனநிறைவு கொண்டார் என்பதை தேடி வந்த தெய்வம் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

கந்தசஷ்டிக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முத்தையனுடைய அலுவலக நண்பர் குமரனின் திருமணம் திருச்செந்தூரில் நடப்பதாக இருந்தது. Continue reading “தேடி வந்த தெய்வம்”

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் முப்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை”

மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

மஞ்சள் கரிசலாங்கண்ணி

வணக்கம்!

இதை என்னுடைய முதல் எழுத்து, முதல் பதிவு அல்லது முதல் கட்டுரை என‌ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் போல் இணைய உலா வரும்போது, தங்க‌ள் இனிது இணையத்தை பார்க்க இறைவன் என்னைப் பணித்தான்.

அதில் எப்படி எழுதுவது எதை எழுதுவது என்று எனக்காகவே முதலில் அந்த பக்கத்தை இறைவன் காண்பித்தான்.

என் முதல் எழுத்து வெளியிடுவதற்கு தகுதியுண்டு என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை கீரைகளின் ராஜா   மஞ்சள் கரிசலாங்கண்ணி.

நான் கிராமத்தில் என் தாயுடன் வயல் ஓரங்களிலும் ஏரிகளிலும் மற்றும் திறந்த வெளிகளிலும் சுற்றித் திரிந்தவன். அது வெறும் சுற்றல் அல்ல. மிகப் பெரிய கல்வி என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏன் தெரியுமா? Continue reading “மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?”