உறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை

உறவுகளின் பாசக்கயிறுகள்

உறவுகள் உதறித் தள்ளிய ஒரு துளியே!
உயிர்வலியால் தினம்துடிக்கும் மைவிழியே!
மழைத்துளியால் துளிர்விட்டு
மண்முழுதும் படர்வதற்கு

மகிழ்ச்சியோடு புறப்பட்ட இளந்தளிரே
உன் மழலைத் தளிரின் மேல்
வெந்நீரை ஊற்றும் வெந்தனல் உறவுகள்!
அதைக் கண்டு மடியாதே!

Continue reading “உறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை”

அன்புத் தந்தைக்கு மகளின் வெள்ளை வரிகள்

அன்புத் தந்தைக்கு மகளின் வெள்ளை வரிகள்

உயிர் தந்த என் உயிரே
உறவென நினைத்தேன் உனையே
என் காப்பியத்தின் கலைமகனே
என் காலத்தின் மூலவனே

உனக்காய் ஒரு கவியை
உரித்தாக்க நான் எண்ணி
உயிர் என்னும் உதிர மையால்
எழுதும் வெள்ளை வரிகள் இவை

Continue reading “அன்புத் தந்தைக்கு மகளின் வெள்ளை வரிகள்”

விடியல் வெகு தொலைவில் இல்லை

விடியல் வெகு தொலைவில் இல்லை

இருட்டறை ஜன்னலின் வழியே

விடியலைத் தேடும் பெண்ணே!

ஒற்றை மின்னலின் வேகம்

கண்டு அஞ்சாதே!

கள்ளிப் பாலின் ருசி அறிந்த உன் தேகம்

காலனைக் காலில் நசுக்காதா?

செந்நெல்லையும் செரித்த உன்னுடல்

வெந்நெருப்பை உமிழாதா?

Continue reading “விடியல் வெகு தொலைவில் இல்லை”