சில பூக்களும்
பட்டாம்பூச்சிகளும்
சேமிக்கப்படுகின்றன
கைபேசி வழி!
அவ்வழியே
தூது விடுதலும்!
பார்வைகளில்
மனிதர்களைத் தவிர்த்த
செயல் வேகம்!
பசுமையிழந்த
நினைவுகளின் மத்தியில்
அனல் பிரதேசம்!
புது விதிகளின்
ஏடுகளில்
ஈரமில்லை!
நவீனத்தின் வீதிகளில்
பளபளக்கும்
நாடகங்கள்
போலி!
குறுகலாகி
நெளிந்து தொலைகிறது
அன்பின் பாதை!
ஆவணங்களும்
ஆபரணங்களும் குவியும்
அன்பில்லா சேமிப்பில்!
உறவுகளைக் கொன்று
உணர்வுகளைத் தின்று
உருவான
வெற்றிப் புதுமைகள்
வீணே உறங்கும்
வீதியில்!
எஸ்.மகேஷ்
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!